நடிகை ஷோபனாவுக்கு பத்ம பூஷன் விருது-ஜனாதிபதி வழங்கினார்
1 min read
Actress Shobana awarded Padma Bhushan by President
28.5.2025
இந்த ஆண்டு குடியரசு தினத்தன்று, மத்திய அரசு மொத்தம் ஏழு பத்ம விபூஷன் விருதுகளையும், 19 பத்ம பூஷன் விருதுகளையும், 113 பத்மஸ்ரீ விருதுகளையும் அறிவித்தது.
முதல் கட்டத்தில், நடிகர் அஜித், பாலகிருஷ்ணா ஆகியோருக்கு பத்ம பூஷன் என மொத்தம் 71 பேருக்கு ஏப்ரல் மாதம் 28-ந் தேதி அன்று விருதுகள் வழங்கப்பட்டன.
இந்நிலையில் இப்போது டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் வைத்து எஞ்சியுள்ள 68 விருத்தாளர்களுக்கு இரண்டாம் கட்டமாக பத்ம விருதுகள் வழங்கப்பட்டன.
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பல்வேறு துறைகளில் சிறந்த சேவைகளைச் செய்த புகழ்பெற்ற ஆளுமைகளுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
அந்த வகையில் இந்த நிகழ்வில் பிரபல நடிகை ஷோபனா பத்ம பூஷன் விருதைப் பெற்றார். தொழிலதிபர் நல்லி குப்புசாமிக்கும் பத்ம பூஷன் வழங்கப்பட்டது.
முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜெகதீஷ் சிங் கேஹர், குமுத்னி ரஜினிகாந்த் லக்கியா ஆகியோருக்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.
மேலும், சாத்வி ரிதம்பரா, ஜதின் கோஸ்வாமி, கைலாஷ் நாத் தீட்சித் ஆகியோர் பத்ம பூஷன் பெற்றனர்.
பொருளாதார நிபுணர் பிபேக் தேப்ராய் மறைவுக்குப் பிறகு கவுரவிக்கப்பட்டனர்.
கண்ணப்பா சம்பந்தன், டாக்டர் நீர்ஜா பட்லா, மந்த கிருஷ்ண மடிகா, சையத் ஐனுல் ஹசன், சாந்த் ராம் தேஸ்வால் ஆகியோர் பத்மஸ்ரீ விருது பெற்றனர்.