தென்காசி மாவட்டத்தில்7 துணை வட்டாட்சியர்கள் நியமனம்- ஆட்சித் தலைவர் உத்தரவு
1 min read
Appointment of 7 Deputy Tahsildars in Tenkasi District – Governor’s Order
28/5/2025
தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவுபடி தென்காசிமாவட்டத்தில் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வந்த 7 பேர்கள் துணை வட்டாட்சியர்களாக பதவி உயர்வுடன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ கே கமல் கிஷோர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது :-
தென்காசியில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல வட்டாட்சியராக பணிபுரிந்து வந்த முதுநிலை வருவாய் ஆய்வாளர் ருக்மணி கோசலை ராணி வீரகேரளம்புதூர் மண்டல துணை வட்டாட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முதுநிலை வருவாய் ஆய்வாளர் ஆர். மீனாட்சி தென்காசி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகத்தின் தலைமை உதவியாளராகவும், தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளர் பி கிருஷ்ணமூர்த்தி செங்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் தலைமையிடத்து துணை வட்டாட்சியராகவும்,
தென்காசி கலால் உதவி ஆணையர் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணியாற்றிய மு.ஆறுமுகம் தென்காசி வருவாய் கோட்டாட்சியர் அலுவலக ராமநதி ஜம்பு நதி மேல்மட்ட கால்வாய் இணைப்பு திட்டத்தின் தனி துணை வட்டாட்சியராகவும், சங்கரன்கோவில் கோட்டாட்சியர் அலுவலக தலைமை உதவியாளர் நிவேதிகா தேவி சிவகிரி வட்டாட்சியர் அலுவலக தலைமை இடத்து துணை வட்டாட்சியராகவும்,
திருவேங்கடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தலைமையிடத்து துணை வட்டாட்சியராக பணிபுரிந்த ஜெயமுருகன் சங்கரன் கோவில் கோட்டாட்சியர் அலுவலக தலைமை உதவியாளராகவும், செங்கோட்டை வட்டாட்சியர் அலுவலக தலைமை இடத்து துணை வட்டாட்சியர் ரத்தின பிரியா திருவேங்கடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தலைமை இடத்து துணை வட்டாட்சியராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் அந்த உத்தரவில் தெரிவித்துள்ளார்.