பழைய குற்றாலம் அருவியை அபகரிக்கும் வனத்துறை- பஞ்சாயத்து தலைவர் புகார்
1 min read
Forest Department is usurping the old Courtallam waterfall – Panchayat president complains
28.5.2025
தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் அருவியை அபகரிக்க நினைக்கும் வனத்துறை மீது ஆயிரப்பேரி ஊராட்சி மன்றத் தலைவர்
தி.சுடலையாண்டி பரபரப்பு புகார் மனு ஒன்றை அனுப்பி உள்ளார.
அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
தென்காசி மாவட்டத்தில் ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் குற்றாலத்தில் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி, சிற்றருவி, பழத்தோட்ட அருவி, செண்பகாதேவி அருவி, தேனருவி, உள்ளிட்ட பல்வேறு அருவிகள் உள்ளது.
தென்காசி மாவட்டத்தில் பெயர் சொல்லும் அளவுக்கு பெரிய தொழிற்சாலைகள் எதுவும் இல்லை ஆனால் இந்தப் பகுதியில் குற்றாலம் இருப்பதனால் நாடு முழுவதும் உள்ள பலலட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஆண்டுதோறும் இங்கு வந்து குளித்து மகிழ்ந்து செல்கின்றனர்.
இதில் தேன் அருவி செண்பகாதேவி அருவி பழத்தோட்ட அருவி சிற்றருவி உள்ளிட்ட கருவிகளை கடந்த காலங்களில் வனத்துறையினர் பல்வேறு பொய்யான காரணங்களை கூறி அந்த அருவிகளை அபகரித்தனர்.
அப்படி அபகரித்து அருவிகளில் பொதுமக்கள் குளிக்க முடியாமலும் சுற்றி பார்க்க முடியாமலும் தடை செய்து இப்போது அந்த அருவிகள் இருந்த இடம் தெரியாத அளவுக்கு அழித்து விட்டனர்.
இப்போது மீதமுள்ள மெயின் அருவி, ஐந்தருவி, புலி அருவி, உள்ளிட்ட அருவிகள் குற்றாலம் பேரூராட்சி கட்டுப்பாட்டிலும் பழைய குற்றாலம் அருவி ஆயிரப்பேரி ஊராட்சி கட்டுப்பாட்டிலும் இருந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு முதல் பழைய குற்றாலம் அருவியையும் பொதுமக்கள் குளிக்க விடாமல் தடுக்கும் வகையில் வனத்துறையினர் அதனை அபகரிக்க தொடர்ந்து பல்வேறு முயற்சிகள் செய்து வருகின்றனர்.
ஏற்கனவே வனத்துறையினர் அபகரித்த சிற்றருவி, பழத்தோட்ட அருவி, செண்பகாதேவி அருவி, தேனருவி, உள்ளிட்ட அருவிகளை பொதுமக்கள் நெருங்க முடியாத அளவிற்கு அடையாளம் தெரியாமல் அழித்தது போல் இப்போது பழைய குற்றாலம் அருவியையும் அபகரித்து அழிக்க முயற்சி செய்து வருகின்றனர்.
இதனால் அந்தப் பகுதியைச் சார்ந்த பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் நேரடியாக பாதிக்கப்படுகின்றனர். மேலும் பழைய குற்றாலம் வாகன நுழைவு கட்டணம், சாலையோர குத்தகை, உள்ளிட்ட வகைகளில் ஆயிரப்பேரி ஊராட்சிக்கு ஆண்டுதோறும் ரூபாய் 50 லட்சம் வரை வருவாய் கிடைத்து வந்தது.
மேலும் இதே பழைய குற்றாலம் அருவி மூலம் பொதுப்பணித்துறைக்கு கடைகள் உடைமாற்றும் அறைகள் கட்டண கழிப்பறைகள் மூலமாக சுமார் 10 லட்சம் ரூபாய் வருமானம் வந்து கொண்டிருந்தது.
கடந்த ஆண்டு முதல் வனத்துறையினரின் தலையிட்டால் நாளுக்கு நாள் பழைய குற்றாலம் அருவிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் எணணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது.
காரணம் குற்றாலம் மெயின் அருவி, புலியருவி, ஐந்தருவி, உள்ளிட்ட அருவிகளில் அருவி பகுதி வரை சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் செல்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால் பழைய குற்றாலத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு முன்பாகவே தடுத்து நிறுத்தப்பட்டு அனைவரையும் நடந்து செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் கூறுகின்றனர்.
மேலும் கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாக அனைத்து அருவிகளிலும் 24 மணி நேரமும் சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் குளித்து வந்த நிலையில் இப்போது பழைய குற்றாலம் அருவியில் மட்டும் காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை மட்டுமே குளிக்க அனுமதிக்கின்றனர்.
இதனால் பழைய குற்றாலம் அருவிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனால் ஆயிரப் பேரி ஊராட்சிக்கு வரவேண்டிய வருமானம் பொதுப்பணித்துறைக்கு வர வேண்டிய வருமானம் என்று சுமார் ஒரு கோடி ரூபாய் அரசுக்கு வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளது.
பழைய குற்றாலம் அருவியை வனத்துறையினர் வசம் கொடுக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி ஆயிரப்பேரி ஊராட்சி மன்றம், பாட்டப்பத்து ஊராட்சி மன்றம் தென்காசி ஊராட்சி ஒன்றியம், தென்காசி மாவட்ட ஊராட்சி ஆகியவற்றில் தீர்மானம் நிறைவேற்றியும், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் சட்டமன்றத்தில் பேசியும் திமுக அதிமுக காங்கிரஸ் மதிமுக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க் சைஸ் கம்யூனிஸ்ட் கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பாட்டாளி மக்கள் கட்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கண்டித்த பிறகும் வனத்துறையினர் தொடர்ந்து பழைய குற்றாலம் அருவியை அபகரிக்க முயற்சி செய்து வருகிறார்கள்.
இது பற்றி கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் சட்டமன்றத்தில் பேசிய போது தமிழக நீர் நிலைத் துறை அமைச்சர் துரைமுருகன் வனத்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் பழைய குற்றாலம் அருவி வனத்துறை வசம் ஒப்படைக்கப்படவில்லை என்று தெளிவாக எடுத்துக் கூறினார்கள். ஆனாலும் எந்தவித அனுமதியும் வராமல் தன்னிச்சையாக வனத்துறையினர் பழைய குற்றாலத்தை அபகரிக்க முயற்சி செய்து வருகின்றனர்.
கடந்த இரண்டு நாட்களாக பழைய குற்றாலம் அருவியில் சுற்றுலா பயணிகளின் நலன் காக்க ஆயிரப்பேரி ஊராட்சி மற்றும் பொதுப்பணித்துறை மூலம் எழுதப்பட்ட விழிப்புணர்வு வாசகங்களை பெயிண்ட் மூலம் அழித்து விட்டனர்
இது பற்றி திமுக அதிமுக காங்கிரஸ் மதிமுக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகளும் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து பழைய குற்றாலம் அருவியை வனத்துறை வசம் ஒப்படைக்க கூடாது என்று பலமுறை கோரிக்கை மனு கொடுத்தும் இன்று வரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஏற்கனவே பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்து வந்த சிற்றருவி பழத்தோட்ட அருவி செண்பகாதேவி அருவி தேனருவி உள்ளிட்ட கருவிகளை அபகரித்த வனத்துறையினர் அந்த அருவிகளை பாதுகாக்கவும் இல்லை பராமரிக்கவும் இல்லை இப்போது அந்த அருவிகள் இருந்த இடம் தெரியாத அளவுக்கு அளித்து விட்டனர்.
மேலும் அந்த அருவிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் செல்வதை தடுத்து நிறுத்திவிட்டு தங்களுக்கு வேண்டிய வசதி படைத்த செல்வந்தர்கள் மற்றும் தனது துறை சார்ந்த அதிகாரிகளை மட்டும் அனுமதிப்பதோடு அதன் மூலம் நாள்தோறும் பணம் வசூல் செய்து வருகின்றனர்.
அதைப்போலவே இயற்கை நமக்கு கொடுத்த வரமாகவும் பெருந்தலைவர் காமராஜர் அவர்களால் திறந்து வைத்த சிறந்த சுற்றுலா தளமான பழைய குற்றாலம் அருவியையும் அடையாளம் தெரியாமல் அடிப்பதற்கு வனத்துறையினர் சதித்திட்டம் தீட்டி வருகிறார்கள் இதனை தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்தி சிறந்த சுற்றுலா தளமாக விளங்கும் பழைய குற்றாலம் அருவியை வழக்கம்போல் ஆயிரப்பேரி ஊராட்சியின் பராமரிப்பில் செயல்படவும் தாங்கள் உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என பணிவுடன் வேண்டுகிறோம். இவ்வாறு அந்தக் கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.
அந்தக் கோரிக்கை மனுவின் நகலினை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தமிழக வனத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ கே கமல் கிஷோர் ஆகியோருக்கும் அனுப்பி உள்ளார்.