கமல் டெல்லி மேல்சபை எம்.பி. ஆகிறார்-தி.மு.க. வேட்பாளர்கள்
1 min read
Kamal will become Delhi Upper House MP – DMK Candidates
28.5.2025
டெல்லி மேல்சபை (ராஜ்யசபா) எம்.பி., தேர்தலில் தி.மு.க., சார்பில் வில்சன், சிவலிங்கம், ரொக்கையா மாலிக் (எ) சல்மா ஆகியோர் போட்டியிடுகின்றனர். ஒரு இடம் ம.நீ.ம.,வுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கமல் ராஜ்யசபா எம்.பி., ஆகிறார் என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
தமிழகத்தில், ஜூலை 24ல் காலியாகும் ஆறு ராஜ்யசபா எம்.பி., பதவிகளுக்கு, ஜூன் 19ல் தேர்தல் நடக்கும் என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இந்நிலையில் இன்று (மே 28) தி.மு.க., வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
இது குறித்து தி.மு.க., தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2025ம் ஆண்டு ஜூன் 19ம் நடக்கும் ராஜ்யசபா எம்.பி., பதவிகளுக்கு தேர்தலில் தி.மு.க., சார்பில் போட்டியிடும் நான்கு இடங்களில், மூன்று இடங்களுக்கு தி.மு.க. வேட்பாளர்களும், மற்றுமுள்ள ஒரு இடத்திற்கு ஏற்கெனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு இடம் ஒதுக்கப்படுகிறது.
தி.மு.க., வேட்பாளர்கள் விவரம் வருமாறு:-
- பி.வில்சன்
- சிவலிங்கம்
- ரொக்கையா மாலிக் (எ) சல்மா
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.