பிலிப்பைன்ஸ் செல்ல இந்தியர்களுக்கு விசா தேவையில்லை
1 min read
Indians do not need a visa to visit the Philippines
39/5/2025
இந்திய பயணிகளுக்கு ஒரு நல்ல செய்தியாக பிலிப்பைன்ஸ் அரசு இப்போது 14 நாட்கள் வரை விசா இல்லாத நடைமுறையை அறிமுகப்படுத்தி உள்ளது.
இதன்படி, பிலிப்பைன்ஸ் நாட்டின் அழகிய கடற்கரைகளையும், சுற்றுலா தலங்களையும் காண விரும்பும் இந்தியர்கள், விசா இல்லாமல், 14 நாட்கள்வரை பிலிப்பைன்ஸ் நாட்டில் தங்கியிருந்து சுற்றி பார்க்கலாம். சுற்றுலாவை ஊக்குவிக்கவும், இந்தியாவுடனான உறவை வலுப்படுத்தவும் இக்கொள்கையை பிலிப்பைன்ஸ் அறிவித்துள்ளது.
மேலும், உரிய விசாவோ அல்லது அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் நிரந்தர வீடோ வைத்துள்ள இந்தியர்கள், மேலும் 30 நாட்கள் தங்களது பயணத்தை நீட்டித்துக் கொள்ளும் திட்டத்தையும் பிலிப்பைன்ஸ் அரசு அறிவித்துள்ளது.