அமெரிக்காவில் பயிலும் சீன மாணவர்களுக்கு டிரம்ப் நிர்வாகம் புதிய நெருக்கடி
1 min read
Trump administration poses new crisis for Chinese students studying in the US
29.5.2025
அமெரிக்காவில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக சீன மாணவர்கள் தான் அதிகம் பயின்று வருகின்றனர். கடந்த 2023-24 ம் ஆண்டு கல்வியாண்டில் மட்டும் சுமார் 2 லட்சத்து 70 ஆயிரம் சீன மாணவர்கள் அமெரிக்காவில் பயின்று வருகின்றனர். அங்கு பயிலும் வெளிநாட்டு மாணவர்களில் 4ல் ஒரு பங்கு சீன மாணவர்கள் என சொல்லும் அளவிற்கு அதிக எண்ணையில் பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில், சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்பு கொண்டவர்கள் சீன மாணவர்களுக்கான விசாக்களை ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். மேலும், வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா நடைமுறைகளை இன்னும் கடினமாக்க பரிசீலனை செய்யுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.
ஏற்கனவே டிரம்ப் நிர்வாகம் ஹார்வர்டு பல்கலைக்கழகம் மீது கெடுபிடிகளை அதிகரித்து வரக்கூடிய சூழலில், தற்போது சீன மாணவர்களுக்கான நெருக்கடி அதிகரித்துள்ளது.