இன்று பணி ஓய்வு பெற இருந்த அரசு பெண் டாக்டர் நேற்று சஸ்பெண்டு
1 min read
A female government doctor who was due to retire today was suspended yesterday.
31.5.2025
தென்காசி மாவட்டம், தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பணியாற்றி வந்த ஸ்ரீ பத்மாவதி என்ற பெண் டாக்டர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வரும் உள் நோயாளிகளுக்கு உணவு கொடுப்பதற்காக கீரை கட்டு கொள்முதல் செய்ததில் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சுகாதாரத்துறையினர் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ரூ.25 மதிக்கத்தக்க ஒரு கிலோ கீரை கட்டு 80 ரூபாய்க்கு வாங்கி மருத்துவர் ஸ்ரீ பத்மாவதி மோசடியில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக சுகாதாரத் துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு மருத்துவர் ஸ்ரீபத்மாவதி தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
எனவே அவர் இதற்கு முன்பு பணியாற்றிய மருத்துவமனைகளில் அவர் மீது எந்தவிதமான குற்றச்சாட்டும் இல்லை என்பதற்கான சான்றிதழை, அவர் பணியாற்றிய தென்காசி அரசு மருத்துவமனை நிர்வாகத்திடம் தூத்துக்குடி மருத்துவமனை நிர்வாகம் கோரியுள்ளது.
அதனைத் தொடர்ந்து தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனை நிர்வாகம் அவர் மீது ஒரு குற்றச்சாட்டு உள்ளதாகவும், அதாவது ஒரு கிலோ கீரை கட்டுவை ரூ.80 க்கு வாங்கி ஊழலில் ஈடுபட்டதாக ஒரு குற்றச்சாட்டு விசாரணையில் இருப்பதாகவும் கூறி (non ) என்.ஓ.சி கொடுத்த நிலையில், இந்த சான்றிதழை தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிர்வாக அதிகாரியாக இருந்த மருத்துவர் ஸ்ரீ பத்மாவதி தனது பணியில் எந்த விதமான பிரச்சினையும் இல்லை என்பது போன்ற போலிச் சான்றிதழ் ஒன்றை தயாரித்து தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் சமர்ப்பித்துள்ளார்.
அந்த சான்றிதழ் மீது சந்தேகம் அடைந்த மருத்துவ கல்லூரி முதல்வர் தென்காசி அரசு மருத்துவமனையில் கீரை கட்டு ஊழலால் தான் பணியிட மாற்றத்தில் சில மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடிக்கு வந்த நிலையில் இவருக்கு இப்படி ஒரு சான்றிதழ் எப்படி வழங்கினார்கள் என்று சந்தேகம் அடைந்த மருத்துவக் கல்லூரி முதல்வர் இது தொடர்பாக தென்காசி மருத்துவமனை நிர்வாகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது தாங்கள் கொடுத்த சான்றிதழ் இது இல்லை. என கூறியுள்ளனர்.
இதனால், அதிர்ச்சியடைந்த தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி முதல்வர் நிர்வாக அதிகாரியாக இருந்தமருத்துவர் ஸ்ரீபத்மாவதியை திருவாரூர் மாவட்டத்திற்கு பணியிடம் மாற்றம் செய்து உத்தரவிட்டார்.மேலும் அவர் தொடர்பான குற்றச்சாட்டுகளை சுகாதாரத்துறை உயரதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தார். இந்நிலையில் மருத்துவர் ஸ்ரீ பத்மாவதி இன்று ஓய்வு பெற இருந்தார்.
ஸ்ரீபத்மாவதி 31-5.2025 (இன்று) அவர் ஓய்வு பெறுவதாக இருந்தார்.
இந்த நிலையில் நேற்றுறைய தினம் அவரை பணியிடை நீக்கம் செய்து தமிழக சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஓய்விற்காக போலிச் சான்றிதழ் தயாரித்த பத்மாவதி கீரை ஊழல் வழக்கில் மட்டுமே சிக்கி இருந்தார். தற்போது அவரது ஓய்விற்காக போலி சான்றிதழ் தயாரித்தது எப்படி அவருக்கு உதவியது யார் அவர் மீது மேலும் என்னென்ன குற்றச்சாட்டுகள் உள்ளது. என்று விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் தென்காசி மற்றும் தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.