விருதுநகர்: காரில் சென்று திருடியவர் கைது
1 min read
Virudhunagar: Man arrested for stealing from car
31.5.2025
காரிலேயே சென்று 40 க்கும் மேற்பட்ட வீடுகளில் திருட்டில் ஈடுபட்ட பலே கில்லாடியை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் சூலக்கரை இபி காலனியைச் சேர்ந்தவர் பாலு மகன் பொன்ராஜ் (வயது 44). இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளது.
காரைக்குடி மற்றும் குன்றக்குடி பகுதிகளில் பூட்டி இருந்த வீட்டை உடைத்து தொடர் திருட்டு நடந்து வந்தது. சிசிடிவி கேமரா அடிப்படையில் போலீசார் குற்றவாளியை தேடி வந்தனர்.
இந்நிலையில் முக்கிய சாலை மற்றும் கேமரா உள்ள சாலைகளை பயன்படுத்தாமல் குறுகிய தெருச் சாலையை பயன்படுத்தி கார் ஒன்று சென்று வந்தது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் காரை பின் தொடர்ந்து பொன்ராஜை போலீசார் பிடித்தனர்.
விசாரணையில் அவர் 40க்கும் மேற்பட்ட வீடுகளை உடைத்து திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவரிடமிருந்து தங்கள் நகைகள், பணம், திருட்டுக்கு பயன்படுத்திய கார், திருட்டு பணத்தில் வாங்கிய கார் என மூன்று கார்களை பறிமுதல் செய்துள்ளனர்.