ஆவுடையானூரில் அபாய நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
1 min read
Overhead water reservoir tank in danger in Avudaiyanur
தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், ஆவுடையானூர் ஊராட்சி வைத்திலிங்க புரத்தில் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி கட்டுவதற்கு கடந்த 2018-2019 நிதி ஆண்டில் 7.15 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.
மேற்படி மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி 2019-2020 நிதி ஆண்டில் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.2020 ஆண்டு பிப்ரவரி மாதம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் நீர் ஏற்றி சோதனை நீரோட்டம் பார்க்கப்பட்டது.
அந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி முற்றிலும் சிமெண்ட் கான்கிரீட்டால் கட்டப்பட்டது. மேற்படி நீர்த்தேக்கத் தொட்டியின் வெளிப்புறத்தில் பூசப்பட்ட பூச்சு அவ்வப்போது எதிர்பாராத விதமாக தொடர்ந்து கீழே விழுகிறது.
எனவே இந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டி தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் நல்ல தரமான மூலப்பொருட்கள் சரியான அளவில் சேர்க்கப்படாததே இதற்கு காரணம் என்றும் தெரிகிறது. மேலும் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியும் இதே நிலையில் இருக்குமோ? என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கடந்த 03-09-2020 அன்று திறந்து வைக்கப்பட்டது. புதிதாக கட்டப்பட்டு 4 ஆண்டுகள் மட்டுமே நிறைவடைந்த நிலையில் அந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் சிமெண்ட் பூச்சுகள் அவ்வப்போது கீழே விழுந்து கொண்டிருப்பதால் அந்தப் பகுதி பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர் இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு
கேள்விக் குறியாக உள்ளது.
எனவே மேற்படி கட்டிடத்தின் தரம் மற்றும் உறுதித்தன்மை குறித்து கட்டிட நிபுணர்கள் மற்றும் பொறியாளர்களை கொண்டு உடனடியாக ஆய்வு செய்து மறு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக மாற்று ஏற்பாடு செய்து தரும்படி வைத்திலிங்கபுரம் ஊர் பொதுமக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
இந்தக் கோரிக்கை மனுவினை தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு அனுப்பியதோடு அதன் நகலினை தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் அனுப்பியுள்ளதாக சமூக ஆர்வலர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.