விமானத்தை இயக்கியவர் அனுபவம் வாய்ந்தவர்
1 min read
How did the plane crash happen?: DGCA, explanation
12.6.2025
ஆமதாபாத்தில் விபத்துக்கு உள்ளான விமானத்தை இயக்கியவர் சுமீத் சபர்வால் அனுபவம் வாய்ந்தவர் என டி.ஜி.சி.ஏ., தெரிவித்து உள்ளது.
ஆமதாபாத் விமான விபத்து தொடர்பாக டிஜிசிஏ எனப்படும் விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் (டி.ஜி.சி.ஏ.) வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு ஏர் இந்தியாவின் பி787 விமானம் கிளம்பிய உடனே நொறுங்கி விழுந்தது. இதில் 12 ஊழியர்கள் உட்பட 242 பேர் இருந்தனர்.
விமானத்தை கேப்டன் சுமீத் சபர்வாலும், கிளிவ் குந்தரும் இயக்கினர். சுமீத் சபர்வால் 8200 மணி நேரம் விமானத்தை இயக்கிய அனுபவம் உண்டு. துணை விமானிக்கு 1100 மணி நேரம் விமானத்தை இயக்கி உள்ளார்.
இந்திய நேரப்படி 1: 39 மணிக்கு விமானம் 23வது ஓடுபாதையில் இருந்து கிளம்பியது. கிளம்பிய சிறிது நேரத்தில் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு(ஏடிசி) அவசர அழைப்பு வந்தது. பிறகு, ஏடிசி முயற்சி செய்தும் எந்த பதிலும் கிடைக்கவில்லை. ஓடுபாதையில் இருந்து கிளம்பிய உடனே விமான நிலையம் அருகே நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது. சம்பவ இடத்தில் கடுமையான புகை மூட்டமாக காணப்படுகிறது.
இவ்வாறு டிஜிசிஏ விளக்கம் அளித்துள்ளது.