June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

விமானம் விழுந்த மருத்துவ கல்லூரி விடுதி மாணவர்கள் 5 பேர் சாவு- 60 பேரின் நிலை என்ன?

1 min read

Plane crashes into medical college hostel – 5 students dead

12.6.2025
ஆமதாபாத்தில் விபத்துக்குள்ளான விமானம், மருத்துவ கல்லூரி மாணவர்கள் தங்கி உள்ள விடுதி மீது நொறுங்கியது. இதில் 5 மாணவர்கள் உயிர் இழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு கிளம்பிய விமானம் சிறிது நேரத்தில் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்துக்கான காரணம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. விபத்து தொடர்பாக பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில், இந்த விமானம் விமான நிலையம் அருகே உள்ள பிஜே மருத்துவ கல்லூரி விடுதி மீது நொறுங்கி விழுந்துள்ளது. இதில், அங்கு உணவு அருந்திக் கொண்டு இருந்த மாணவர்கள் 5 பலியானதாகவும், மேலும் சிலர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்த புகைப்படங்களும் வெளியாகி உள்ளன.

மதிய நேரம் என்பதால் பயிற்சி மருத்துவர்கள் ஏராளமானோர் உணவு அருந்த விடுதிக்கு வந்ததாக தெரிகிறது. விமான விபத்து காரணமாக, விடுதி கட்டிடம் முற்றிலுமாக எரிந்துள்ளது. இதனால் 60க்கும் மேற்பட்ட பயிற்சி மருத்துவர்கள் கதி என்ன? என்பது இன்னும் தெரியவில்லை. பலர் மாணவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *