கனிமொழி எம்பிக்கு வீரவாள் பரிசளிப்பு
1 min read
Veeravāl Award to Kanimozhi MP
14.6.2025
தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே.ஜெயபாலன் தலைமையில்
ரஷ்யா பயணத்தை முடித்துவிட்டு தூத்துக்குடி வருகை தந்த கனிமொழி எம்பிக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் சுரண்டை வே.ஜெயபாலன் கனிமொழி எம்பிக்கு வீரவாள் பரிசளித்தார்.
ரஷ்யா பயணத்தை முடித்து விட்டு தூத்துக்குடிக்கு வருகை தந்த திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்பிக்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப் பாளர் சுரண்டை வே.ஜெயபாலன் தலைமையில் திமுகவினர் உற் சாக வரவேற்பு அளித்தனர்.
திமுக நாடாளுமன்ற குழு தலைவரும், திமுக துணை பொதுச்செயலாளருமான கனிமொழி எம்பி பகல்ஹாம் தாக்குதல் தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாட்டை ரஷ்யா உள்ளிட்ட வெளி வெளிநாடுகளுக்கு தெளிவுபடுத்துவதற்காக குழு தலைவராக சிறப்பாக செயல்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தியா திரும்பினார்.
அவருக்கு திமுகதலைவரும், தமிழக முதல்வ ருமான மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் பெருமையை உலகறிய செய்த கனிமொழிக்கு எம்பிக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிலையில் நேற்று தனது தொகுதியான தூத்துக்குடிக்கு வருகை தந்தார். அவருக்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே.ஜெயபாலன் வீரவாள் பரிசளித்து வாழ்த்து தெரிவித்தார்.
இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக ஒன்றிய செயலாளர்கள் ஆலங்குளம், செல்லத்துரை, கீழப்பாவூர் சிவன் பாண்டியன், கடையம் மகேஷ் மாயவன், தென்காசி மேற்கு வல்லம் எம்.திவான் ஒலி, தென்காசி கிழக்கு ஆர். எம்.அழகு சுந்தரம், தென்காசி நகர திமுக செயலாளர் ஆர்.சாதிர், செங்கோட்டை நகர திமுக செயலாளர் வழக்கறிஞர்
ஆ.வெங்கடேசன், சுரண்டை நகர திமுக செயலாளர் கூட்டுறவு கணேசன், வர்த்தக அணி அமைப்பாளர் சுரண்டை முத்துக்குமார், மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளர் டி. ஆர்.கிருஷ்ண ராஜா, மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் இசக்கிப் பாண்டியன், திமுக தலைமை செயற்குழு உறுப்பி னர்கள் இலத்தூர் பூ. ஆறுமுகச்சாமி, வீ.கே.புதூர் சேசுராஜன், திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் செங்கோட்டை எஸ்.எம்.ரஹீம் ராஜேஸ்வரன், கடையநல்லூர் நகர்மன்றத் தலைவர் மூப்பன் ஹபிபுர் ரஹ்மான், தென்காசி யூனியன் சேர்மன் வல்லம் மு.ஷேக் அப்துல்லா, ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன், ஆலடி எழில்வாணன், மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் தென்காசி இஞ்சி இஸ்மாயில், ஒன்றிய கவுன்சிலர் வீராணம் ஷேக் முகமது, பொன் செல்வன், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் ஜெ.கே.ரமேஷ், பண்பொழி பேரூராட்சி மன்ற தலைவர் கரிசல். இராஜராஜன், கீழப்பாவூர் பேரூராட்சிமன்றத் தலைவர் ராஜன், திமுக பேரூர் செயலாளர்கள் மேலகரம் இ. சுடலை. குற்றாலம் குட்டி, இலஞ்சி முத்தையா, ஜெகதீசன், சங்கீதா சுதாகர் சங்கர நயினார், ஷேக்பரீத்,
ஊர்மேலழகியான் கருப்பண்ணன், அழகப்பபுரம் வே.கணேசன் தென்காசி ராமராஜ், உட்பட பலர் கலந்து கொண்டனர்.