பிரதமர் மோடிக் சைப்ரஸ் நாட்டின் விருது
1 min read
Prime Minister Modi receives Cyprus award
16.6.2025
இதை 140 கோடி இந்தியர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன் என சைப்ரஸ் நாட்டின் உயரிய விருது பெற்ற பிறகு பிரதமர் மோடி தெரிவித்தார்.
அரசு முறை பயணமாக சைப்ரஸ் நாட்டிற்கு பிரதமர் மோடி சென்றுள்ளார். நிக்கோசியாவில் உள்ள அதிபர் மாளிகையில், பிரதமர் மோடிக்கு சைப்ரஸ் அரசின் சார்பில் அதிகாரப்பூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது.
சைப்ரஸின் மிக உயர்ந்த விருதான கிராண்ட் கிராஸ் ஆப் தி ஆர்டர் ஆப் மாகாரியோஸ் III விருதை பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடவுலிடெசு வழங்கி கவுரவித்தார். பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது:
எதிர்காலத்தில், எங்கள் செயலில் உள்ள கூட்டாண்மை புதிய உயரங்களைத் தொடும் என்று நான் நம்புகிறேன். அமைதியான மற்றும் பாதுகாப்பான உலகளாவிய சூழலை உருவாக்குவதற்கும் பங்களிப்போம்.
இந்தியாவிற்கும், சைப்ரஸ் நாட்டிற்கும் இடையே நல்ல உறவுகள் உள்ளது.
இந்த விருதை 140 கோடி இந்தியர்களுக்கும் அர்பணிக்கிறேன். அனைத்து இந்தியர்களின் சார்பாக, இந்த கவுரவத்தை மிகுந்த பணிவுடனும், நன்றியுடனும் ஏற்றுக்கொள்கிறேன்.இந்த விருது அமைதி, பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் நமது மக்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பின் அடையாளமாகும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.