June 19, 2026

Seithi Saral

Tamil News Channel

பாலில் கலப்படம் செய்தால் குண்டாஸ் சட்டத்தில் கைது- தென்காசி ஆட்சியர் எச்சரிக்கை

1 min read

If you adulterate milk, you will be arrested under the Guntas Act – Tenkasi Collector warns

17.6.2026
தென்காசி மாவட்டத்தில் பால் விற்பனை செய்யும் மொத்தம் மற்றும் சில்லரை பால் வியாபாரிகள் மற்றும் பால் நிறுவனங்கள் யாரேனும் கலப்படத்தில் ஈடுபட்டாலோ அல்லது வேதிப்பொருட்களை கலந்து விற்பனை செய்தாலோ அல்லது பால் கலப்படம் என்று கண்டுபிடிக்கப்பட்டாலோ அவர்கள் மீது உணவு பாதுகாப்புத்துறை சட்டம் மூலம் மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தென்காசி மாவட்ஆட்சித்தலைவர்
ஏ.கே.கமல்கிஷோர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பால் என்பது சிறுவர்கள் முதல் அதிலும் பிறந்த குழந்தைகள் முதல் வயதான முதியவர்கள் வரை உட்கொள்ளும் ஒரு பொதுவான சாதனம் ஆகும். அந்தபாலில் கொழுப்புச் சத்து, புரதச்சத்து மற்றும் கால்சியம் சத்து போன்ற பலவிதமான சத்துக்கள் அடங்கிய பொருளாகும். அதை அனைவரும் தினமும் பருகும் நிலை இருக்கிறது. இதனை பயன்படுத்தி பால் உற்பத்தி கூடுதலாக தேவைப்படுவதால் அதில் கலப்படம் செய்து விற்பனை செய்து வருகிறார்கள் என்பது தெரிய வருகிறது. பாலில் இதுவரை தண்ணீர் மட்டும் கலந்து விற்பனை செய்து வந்ததை கடுமையாக எச்சரித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வரப்பட்டது. இந்நிலையில் தற்சமயம் பாலில் தண்ணீர் அல்லாத உணவு அல்லாத சில வேதிப் பொருட்கள் அதுவும் உணவே அல்லாத வேதிப்பொருட்களை போன்ற பொருட்களை சிலபேர் கலந்து அதை பொதுமக்களுக்கு விற்பனை செய்வதற்கு முயற்சி செய்கிறார்கள். அவ்வாறு கலந்து விற்பதால் அவர்களுக்கு இலாப நோக்கம் அதிகமாகிறது. பால் அதிக இலாபத்திற்கு விற்கப்படுகிறது போன்ற சுயலாபத்திற்காக பொதுமக்களின் உயிர் மீதும் சிறிதும் அச்சமில்லாமல், பொதுமக்களை கவனித்துக் கொள்ளாமல் அவர்கள் நடந்து கொள்வது மிகவும் கண்டிக்கத்தக்க செயலாக இருக்கிறது. அவ்வாறு செயல்களை செய்யும் சில நபர்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. அவர்கள் மீது மிக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

மேலும், இனிவரும் காலங்களில் சாலைகளில் பால் விற்பனை செய்பவர்கள் அல்லது டிப்போக்களில் பால் விற்பனை செய்பவர்கள் அல்லது பால் பாக்கெட்டுகள் மூலம் விற்பனை செய்பவர்கள், பால் நிறுவனங்களின் மூலம் விற்பனை செய்பவர்கள் போன்றவர்கள் யாரேனும் கலப்படத்தில் ஈடுபட்டாலோ அல்லது வேதிப்பொருட்களை கலந்து விற்பனை செய்தாலோ அல்லது பால் கலப்படம் என்று கண்டுபிடிக்கப்பட்டாலோ அவர்கள் மீது உணவு பாதுகாப்புத்துறை சட்டம் மூலம் மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்ளப் படுகிறது. அந்த நடவடிக்கை உணவு பாதுகாப்பு தரச்சட்டம் 2006-இன் படி ரூபாய் ஒரு இலட்சம் முதல் பத்து இலட்சம் வரை அபராதமும் மேலும் ஆறு மாதங்கள் சிறை தண்டனை வரையிலும் உள்ள வழக்குகள் பதிவு செய்து தண்டனை வழங்கப்படும் அல்லது அவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுவார்கள் என தெரிவித்துக் கொள்ளப் படுகிறது.

மேலும் அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு பாதுகாப்பு உரிமம் ரத்து செய்து அவர்கள் விற்பனை முழுவதுமாக நிறுத்தவும் வாய்புள்ளது. அது கடுமையாக கடைபிடிக்கப்படும் என்று எச்சரிக்கப்படுகிறது. ஆகவே, பால் வியாபாரிகள் எக்காரணத்தை கொண்டும் பாலில் கலப்படம் செய்து விற்பனை செய்ய வேண்டுமென்ற எண்ணம் சிறிதும் நினைத்துக் கொள்ளாமல் பொதுமக்களுக்கு நல்லநோக்கில் ஆரோக்கியத்தை கடைபிடிக்கவேண்டுமென இதன் வாயிலாக தெரிவித்துக்கொள்ளப் படுகிறது எனதென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *