தமிழ்நாட்டில் வெற்றி பெறுவோம்; மத்திய மந்திரி அமித்ஷா பேட்டி
1 min read
We will definitely win the 2026 elections in Tamil Nadu; Union Minister Amit Shah interview
21.6.2025
மத்திய மந்திரி அமித்ஷா ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-
பாராளுமன்ற தொகுதி வரையறை விரைவில் மேற்கொள்ளப்பட இருக்கிறது. யாரும் குறை சொல்லாத அளவுக்கு தொகுதி வரை யறை செய்து முடிக்கப்படும்.தமிழ்நாட்டில் தொகுதி வரையறை செய்வதை தி.மு.க. அரசியல் ஆக்குகிறது. 2026-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தி.மு.க. இதை பிரச்சினையாக மாற்ற நினைக்கிறது.
அதுமட்டுமின்றி மொழி பிரச்சினையையும் தி.மு.க.வினர் கிளப்புகிறார்கள். ஆனால் தமிழக மக்கள் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள். அவர்களுக்கு 2026-ம் ஆண்டு தேர்தலில் யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்பது தெரியும். நிச்சயம் தமிழ்நாட்டில் 2026-ல் அரசியல் மாற்றம் ஏற்படும். நாங்கள் வெற்றி பெறுவோம்.
தமிழ்நாட்டில் அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி நிச்சயம் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். இதை என்னால் உறுதியாக கூற முடியும். தமிழ்நாட்டில் மட்டுமின்றி பீகார், மேற்குவங்காள தேர்தலிலும் பா.ஜ.க.வுக்கு வெற்றி கிடைக்கும்.நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ம் ஆண்டு இறுதியில் நிறைவு பெறும். மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பல்வேறு தொழில் நுட்பங்களை பயன்படுத்த இருக்கிறோம். எனவே அதற்கு முன்னதாகவே கணக்கெடுப்பு முடிவுக்கு வரலாம். 2029-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வித்தியாசமானதாக இருக்கும். பெண்களுக்கு வழங்கப்படும் 33 சதவீத இட ஒதுக்கீட்டுடன் அந்த தேர்தல் நடத்தப்படும்.
இவ்வாறு அமித்ஷா கூறி னார்.