ஆஸ்பத்திரிக்குள் புகுந்து நர்சிங் மாணவியின் கழுத்தை அறுத்து கொன்ற காதலன்
1 min read
The lover who broke into the hospital and slit the throat of a nursing student killed her
1.7.2025
மத்தியபிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்ட மருத்துவ மனையில் சந்தியா சவுத்ரி (வயது 18) என்ற நர்சிங் மாணவி தொழிற்கல்வி பயின்று வருகிறார்.
நேற்றுமுன்தினம் மாணவி ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் பணியில் இருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர் மாணவியை தாக்கினார். ஆஸ்பத்திரியில் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டிருந்த நிலையில் யாருமே மாணவியை காப்பாற்ற முன்வரவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் திடீரென ஆவேசமடைந்த வாலிபர் மாணவியின் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.
பட்டப்பகலில் நடை பெற்ற இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சம்பவத்தை வேடிக்கை பார்த்த ஒருவர் தனது செல்போனிலும் வீடியோ எடுத்து உள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகியது.
இதற்கிடையே மாண வியை கழுத்தறுத்து கொலை செய்த வாலிபர் தானும் தற்கொலைக்கு முயன்றார். ஆனால் அவரது முயற்சி தோல்வி அடைந்தது. இதனால் அவர் ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓடிவிட்டார்.
கொலை குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மாணவி யின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
இதில் மாணவியை கொலை செய்தது அவரது காதலன் அபிஷேக் என்பது தெரியவந்தது. இவரும், மாணவியும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.
சமீபத்தில் அவர்களுக் கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்த நிலையில் அபிஷேக் தனது காதலியை கழுத்தறுத்து கொலை செய்தது தெரிய வந்தது.இதைத்தொடர்ந்து போலீசார் அபிஷேக்கை கைது செய்தனர்.