நியூ யார்க் மேயராகும் இந்திய வம்சாவளி இஸ்லாமியர்-டிரம்ப் விமர்சனம்
1 min read
Indian-origin Muslim to be New York mayor- Trump criticism
3.7.2025
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மேயர் வேட்பாளர் சோஹ்ரான் மம்தானி ‘கம்யூனிஸ்ட் பைத்தியக்காரர்’ என்று அழைத்துள்ளார்.
ட்ரூத் சோஷியலில் வெளியிட்ட பதிவில், மம்தானி நியூயார்க் நகரத்தை அழிக்க அனுமதிக்க மாட்டேன் என்றும், எல்லாம் அவரது கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் டிரம்ப் கூறினார். நியூயார்க் நகரத்தை காப்பாற்றி அதை மீண்டும் சிறந்ததாகவும் மாற்றுவேன் என்றும் டிரம்ப் மேலும் கூறினார்.
கடந்த மாதம், 33 வயதான இந்திய -அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர் ஜுஹ்ரான் மம்தானி, முன்னாள் ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோவை தோற்கடித்து, நியூயார்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இடதுசாரி மற்றும் பாலஸ்தீன சார்பு அரசியல்வாதியான ஜுஹ்ரான் மம்தானி அமெரிக்காவின் மிகப்பெரிய நகரத்தின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது டிரம்பிற்கும் பழமைவாதிகளுக்கும் பெரும் அடியாகும்.
எனவே மம்தானி வெற்றி பெற்றதை சகித்துக்கொள்ள முடியாத டிரம்ப் அவரை தொடர்ந்து கடுமையாக தொடர்ந்து கடுமையான விமர்சித்து வருகிறார்.
பிரபல இந்திய திரைப்பட இயக்குனர் மீரா நாயர் மற்றும் இந்திய-உகாண்டா கல்வியாளர் மஹ்மூத் மம்தானியின் மகன் சோஹ்ரான் மம்தானி ஆவார். மம்தானி குயின்ஸின் மாநில சட்டமன்ற உறுப்பினர். அக்டோபர் 18, 1991 அன்று உகாண்டாவின் கம்பாலாவில் பிறந்த மம்தானி நியூயார்க் நகரில் வளர்ந்தார். ஏழு வயதாக இருந்தபோது தனது பெற்றோருடன் நியூயார்க்கிற்கு குடிபெயர்ந்தார்.
கடந்த மாதம் நடந்த மேயர் தேர்தலில், இஸ்ரேல் மற்றும் சியோனிசத்தின் தீவிர ஆதரவாளரான முன்னாள் நியூயார்க் ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோ, பிரைமரியில் எதிர்பாராத தோல்வியைச் சந்தித்தார்.
பாரம்பரிய கிறிஸ்தவ வாக்குகளையும், மக்கள் தொகையில் 10 சதவீதத்திற்கும் அதிகமான யூத வாக்குகளையும் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆண்ட்ரூ கியூமோ, எளிதாக வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இருப்பினும், மம்தானியின் முற்போக்கான கருத்துக்களும், காசா மற்றும் ஈரான் மீதான இஸ்ரேலிய அட்டூழியங்களும் மக்களைப் பாதித்தன. தோல்வியை ஏற்றுக்கொண்ட கியூமோ, மம்தானியை வாழ்த்தினார்.