நெல்லை வழியாக சென்னை – செங்கோட்டை இடையே சிறப்பு ரெயில்
1 min read
Special train between Chennai and Sengottai via Nellai
4.7,2025
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் வரும் 7ம் தேதி நடைபெற இருக்கிறது. அதையொட்டி ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை வழியாக செங்கோட்டைக்கு வரும் 6ம் தேதி சிறப்பு ரெயில் இயக்கப்பட இருக்கிறது. இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சென்னை எழும்பூர் -செங்கோட்டை இடையே திருநெல்வேலி வழியாக சிறப்பு ரெயில் இயக்கப்பட இருக்கிறது.
சென்னை எழும்பூரில் இருந்து வரும் 6-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9.55 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் (வ.எண் 06089) மறுநாள் காலை 11.30 மணிக்கு செங்கோட்டையை சென்றடையும்.
மறுமார்க்கத்தில், செங்கோட்டையில் இருந்து 7-ந் தேதி (திங்கட்கிழமை) இரவு 7.45 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06090) மறுநாள் காலை 9.05 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.
இந்த சிறப்பு ரெயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த ரெயில்களுக்கான முன்பதிவு நாளை (4-ந்தேதி) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.