ஒரே நாளில் இரு மாணவர்கள் கொலை; எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
1 min read
Two students killed in one day? Edappadi Palaniswami condemns DMK government!
3/7/2025
ஒரே நாளில் சிறுவன் ஒருவன் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும், மோதலில் மாணவர் ஒருவர் உயிரிழந்ததாகவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் 13 வயதான ரோகித் என்ற சிறுவன் காரில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும், ஈரோடு குமலன்குட்டை பகுதியைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவன் ஆதித்யா, பள்ளிக்கு அருகில் சக மாணவர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்த நிலையில், இரு சம்பவத்துக்கும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தனது எக்ஸ் பக்கத்தில் எடப்பாடி பழனிசாமி Tகூறியிருப்பதாவது:-
மாணவர்கள் இடையிலான மோதலில் ஈரோடு ஆதித்யா உயிரிழந்ததாக செய்திகள் வருகின்றன. மாணவர்கள் இடையே எப்படி இவ்வளவு வன்முறை உணர்வு வருகிறது? அடிப்படையிலேயே குறைபாடு கொண்ட அரசாக இந்த திமுக அரசு இருப்பதையே இத்தகைய நிகழ்வுகள் உணர்த்துகின்றன.
இன்று என்ன போட்டோஷூட் எடுக்கலாம்? என்பதில் மட்டும் இருக்கும் சிந்தையை, இன்று எப்படி முறையாக அரசை நிர்வகிக்கலாம்? என்பதில் மாற்ற வேண்டும் என முதல்வரை கேட்டுக்கொள்வதோடு, மேற்கூறிய சம்பவங்களில் குற்றம் இழைத்தோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.