ஆயுர்வேத மருந்துகளுக்கு இறக்குமதி உரிமம் கட்டாயம் பெற வேண்டும் – ஐகோர்ட்டு உத்தரவு
1 min read
Import license mandatory for Ayurvedic medicines – High Court orders
5.7.2025
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆயுர்வேத மருந்துகளுக்கு கட்டாயம் உரிமம் பெற வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சிங்கப்பூரில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கோடாரி தைலம் உள்ளிட்டவற்றை சுங்க அதிகாரிகள் முடக்கிவைத்ததை எதிர்த்து ஆக்சென் நிறுவனம், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில், கோடாரி தைலம் சுங்க கட்டண வரம்புக்குள் வருவதால், இறக்குமதி செய்யப்படும் ஆயுர்வேத மருந்துகள் சோதனைக்கு உட்பட்டதுதான்.
மருந்து மற்றும் ஒப்பனை பொருட்கள் சட்டம் ஆயுர்வேத பொருட்களுக்கும் பொருந்தும் என தெரிவித்து, அனைத்து மருந்து பொருட்களுக்கும் இறக்குமதி உரிமம் பெற வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், ஆயுர்வேத மருந்துகளுக்கு லைசென்ஸ் பெறுவதற்கு விண்ணப்பிப்பது தொடர்பான பழைய விதிகளில் மாற்றம் கொண்டுவர வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதி, மனுதாரரின் சரக்கை ஆய்வு செய்து விடுவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.