அரசு பங்களாவை சந்திரசூட் காலி செய்யக் கோரி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடிதம்
1 min read
Supreme Court writes to Central Government, asks Chandrachud to vacate government bungalow
6.7.2025
உச்சநீதிமன்றத்தின் 51-ஆவது தலைமை நீதிபதியாக கடந்த நவம்பர் மாதம் பதவியேற்ற சஞ்சீவ் கன்னாவின் பதவிக் காலம் முடிவடைந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பூஷன் ராமகிருஷ்ண கவாய் பொறுப்பேற்றார்.
உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட் தான் தலைமை நீதிபதியாக பதவி வகித்த காலத்தில் வசித்த அரசு பங்களாவில் தான் தற்போது வசித்து வருகிறார்.
இந்நிலையில், சந்திரசூட் அவர் வசித்து வரும் அரசு பங்களாவை காலி செய்து ஒப்படைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றத்தில் இருந்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.