மத்திய அரசு ஊக்கத்தொகை திட்டத்தால் 3.50 கோடி இளைஞர்களுக்கு வேலை
1 min read
Central government incentive scheme provides jobs to 3.50 crore youth
6/7/2025
”வேலைவாய்ப்புடன்இணைந்த ஊக்கத்தொகைத் திட்டத்தால், 3 கோடியே 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும்,” என, வருங்கால வைப்பு நிதி மண்டல ஆணையர் விஜய்ஆனந்த் தெரிவித்தார்.
அவரது பேட்டியில் கூறியிருப்பதாவது:-
வேலைவாய்ப்புடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்திற்கு, மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் வழங்கியது. இதனால், 3 கோடியே, 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இத்திட்டத்திற்கு மத்திய அரசு, 99,446 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது.
ஆகஸ்ட் 1 முதல் 2027 ஜூலை 31 வரை உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகளுக்கு, இத்திட்டம் பொருந்தும்.
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில், முதல் முறையாக பணியில் இணைந்து, வைப்பு நிதிக்கு பதிவு செய்யப்படும் ஊழியர்களுக்கு, 15,000 ரூபாய் வரை ஊக்கத்தொகை இரண்டு தவணைகளாக வழங்கப்படும்.
இத்தொகை, நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இதனால், அமைப்புசாரா தொழில் துறைகளில் உள்ளவர்கள், தொழில் கட்டமைப்புக்குள் கொண்டு வரப்படுவர்.