அச்சன்கோவில் மணலாறு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
1 min read
Tourists flock to Manalaru Falls in Achankovil
8.7.2025
தென்காசி அருகே கேரள மாநில எல்லையில் உள்ள
அச்சன்கோவில் மணலாறு அருவியில் கடந்த சில நாட்களாக சுற்றுலாப் பயணிகள் குவிந்தவண்ணம் உள்ளனர். இதனால் கேரளா வனத் துறைக்கு ஒரே நாளில் ரூ.1 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது
தமிழ்நாடு – கேரள எல்லை பகுதியான செங்கோட்டை -அச்சன்கோவில் சாலையில் இயற்கை எழில் கொஞ்சும் அடர்ந்த வனப்பகுதியில் கும்பாவுருட்டி அருவிக்கு செல்லும் வழியில் மணலாறு அருவி அமைந்துள்ளது. இந்த அருவி அச்சன்கோவில் அருவி என்றும் அழைக் கப்படுகிறது. 70 அடி உய ரத்தில் இருந்து விழும் மணலாறு அருவியில் குளிக்க சுற்றுலா பயணி கள் அதிகம் ஆர்வம் காட் டுவர். தற்போது கும்பாவுருட்டி அருவிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் பலர் மணலாறு அருவியை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
இந்த அருவிக்கு தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங் களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை தருகின்றனர். இந்த அருவியில் குளிக்க பெரிய வர்களுக்கு ரூ.50, குழந்தை களுக்கு ரூ.25 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
நேற்று முன்தினம் விடுமுறை என் பதால் சுற்றுலா பயணிகள் இங்கு அதிகம் குவிந்து அரு வியில் உற்சாகமாக்குளித்து மகிழ்ந்தனர். இதனால் கேரள வனத்துறைக்கு ஒரே நாளில் ரூ.1 லட்சம் வருவாய் கிடைத்தள்ளது. இதுகுறித்து கேரளா வனத்துறையினர் கூறுகையில், மணலாறு அருவி
யில் வார நாட்களில் ரூ.35 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரையும், விடுமுறை நாட்களில் ரூ.80 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரையும் வனத்துறைக்கு வருமானம் கிடைக்கும். நேற்று முன் தினம் ஒரே நாளில் ஆயி ரக்கணக் கானோர் வந்துள்ளனர். இதன் மூலம் ரூ.1 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.
அதன்அருகேயுள்ள கும்பாவு ருட்டி நீர்வீழ்ச்சி இந்த மாதமே திறக்கப்படும். இதன் மூலம், தமிழ்நாடு மற்றும் கேரளாவிலிருந்து அதிக சுற்றுலாப் பயணி கள் இங்கு வருவார்கள். அச்சன்கோவில் ஐயப்பன் கோயிலும் அருகில் உள்ளது. ஐயப்பன் கோயி லுக்குச் செல்பவர்கள் அருவியில் நீராடிவிட்டுத் திரும்புவார்கள். இதன் மூலம் வருவாய் மேலும் அதிகரிக்கும்’ என்றனர்.
இந்த அருவிக்கு சுற்றுலாப் பய ணிகளின் வருகை அதிகரித்ததால், செங்கோட்டை -அச்சன்கோவில் சாலையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழ மையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தமிழக போலீசார் மற் றும் கேரளா வளத்துறை யினர் போக்குவரத்து நெரிசலை ஒழுங்கு படுத்தினர். காட்டுப் பாதையில் பயணிக்கும் பயணிகள் கவனமாக இருக்க வேண்டுமென வனத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.