கனடாவில் பயிற்சி விமானங்கள் மோதல்; கேரள மாணவன் பலி
1 min read
Training planes collide in Canada; Kerala student dies
11.7.2025
கனடா நாட்டின் மனிடோபாவில் உள்ள ஸ்டெயின்பாக் பகுதியில் விமானம் ஓட்டும் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இதில் கேரளாவின் திருப்பூணித்துறையைச் சேர்ந்த ஸ்ரீஹரி சுகேஷ், கனடாவைச் சேர்ந்த சவானா மே ராய்ஸ் ஆகியோர் பயிற்சி பெற்று வந்தனர்.
கடந்த புதன் கிழமை இருவரும் தனித்தனியாக விமானத்தை இயக்கும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வின்னிபெக்கில் இருந்து 60 கி.மீ. தொலைவில் தெற்கு விமான நிலையம் அருகே விமானத்தை தரையிறக்க முயன்றனர்.
அப்போது எதிர்பாரா விதமாக 400 மீட்டர் உயரத்தில் இருவரின் விமானங்களும் மோதி விபத்தில் சிக்கியது. உடனே தீயும் பற்றிக் கொண்டது. இதில் ஸ்ரீஹரி, சவானா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுதொடர்பாக, கனடா போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணை நடத்தி வருகிறது.