வேலூர் கோட்டை அகழியில் விழுந்து போலீஸ்காரர் சாவு
1 min read
Policeman dies after falling into Vellore Fort moat
13.8.2025
வேலூர் கோட்டையில் நடைபயிற்சி செய்து கொண்டிருந்த போலீஸ்காரர் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூரைச் சேர்ந்த ஜெயசீலன் என்பவர் 15-வது பட்டாலியன் அலுவலக கண்காணிப்பாளராக (அமைச்சுப்பணி) பணியாற்றி வந்தார். இந்த நிலையில் இன்று காலையில் ஜெயசீலன் வேலூர் கோட்டையில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு, அகழிக்குள் விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் அவரது உடலை அகழிக்குள் இருந்து மீட்டனர். பின்னர், பிரேத பரிசோதனைக்காக உடலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். வழக்குப்பதிவு செய்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.