September 1, 2026

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவிடம் இருந்து பிரமோஸ் ஏவுகணைகளை வாங்க இந்தோனேசியா விருப்பம்

1 min read

Indonesia interested in buying Brahmos missiles from India

16.11.2025
மத்திய பாதுகாப்புத்துறை மந்திரியும், பா.ஜ.க. மூத்த தலைவருமான ராஜ்நாத் சிங் உத்தர பிரதேச மாநிலத்திற்குச் சென்றார். அவர் லக்னோவில் பா.ஜ.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன்பின் நடந்த நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பேசியதாவது:

நமது தலைமை, நமது தொண்டர்களின் உழைப்பால் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது.

பிரமோஸ் ஏவுகணைகளை வாங்க இந்தோனேசியா விருப்பம் தெரிவித்துள்ளது.

லக்னோவில் பிரமோஸ் ஏவுகணை உற்பத்தி ஆலை அமைந்துள்ளது.

பா.ஜ.க.வில் நான் மாவட்ட இளைஞரணி தலைவராகவும், தேசிய இளைஞரணி தலைவராகவும், கட்சியின் தேசிய பொதுச்செயலாளராகவும் பணியாற்றியுள்ளேன். கட்சியில் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும்.

இந்தியாவின் மதிப்பை உலக நாடுகள் மத்தியில் பிரதமர் மோடி உயர்த்தி உள்ளார். தற்போது இந்தியா பேசும்போது உலகம் கேட்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *