June 13, 2026

Seithi Saral

Tamil News Channel

வந்தே மாதரம் பாடலால் தான் இந்தியாவுக்கு விடுதலை கிடைத்தது- பிரதமர் மோடி பேச்சு

1 min read

India got freedom because of the song Vande Mataram – Prime Minister Modi’s speech

8.12.2025
பரபரப்பான அரசியல் சூழலில் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடா் கடந்த 1 ஆம் தேதி தொடங்கியது. வருகிற 19-ந் தேதி வரை இந்த கூட்டம் நடைபெறுகிறது.

நாட்டின் தேசியப் பாடலான வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி பாராளுமன்றத்தின் சிறப்பு விவாதம் இன்று நடைபெற்றது. மாநிலங்களவையில் வந்தே மாதரம் பாடல் சிறப்பு விவாதத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார்.

மக்களவையில் விவாதத்தை தொடங்கி வைத்து பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

  • புனித பாடல் குறித்த விவாதத்தை தொடங்கி வைப்பதில் பெருமை அடைகிறேன்.
  • இந்திய நாட்டின் விடுதலைக்கு முக்கியப் பங்காற்றிய பாடல் வந்தே மாதரம்.
  • வந்தே மாதரம் என்பதற்கு தாய் மண்ணே தலை வணங்குகிறேன் என்பது பொருள்.
  • தலைமுறைகளைக் கடந்து உத்வேகம் அளித்து வருகிறது வந்தே மாதரம் பாடல்.
  • வந்தே மாதரம் பாடலில் நூற்றாண்டு விழா, நெருக்கடி நிலையின்போது தற்செயலாக அமைந்து விட்டது.
  • வந்தே மாதரம் பாடலால் தான் இந்தியாவுக்கு விடுதலை கிடைத்தது.
  • இந்த விவாதத்தின் மூலம், எதிர்கால சந்ததியினர் வந்தே மாதரம் குறித்து கற்பிக்கப்படுவர்.
  • இந்தியாவின் போர் முழக்க பாடலாக வந்தே மாதரம் இருக்க வேண்டும்.
  • God Save the Queen பாடலை இந்தியர்கள் பாட வேண்டும் என பிரிட்டிஷார் விரும்பினர்.
  • பிரிட்டிஷாருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வந்தே மாதரம் பாடல் அமைந்தது.
  • இந்தியர்களின் உறுதியை பறைசாற்றும் பாடலாக வந்தே மாதரம் விளங்குகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *