ஆந்திராவில் 2-வது, 3-வது குழந்தை பெறும் தம்பதிக்கு ரூ.25,000 ஊக்கத்தொகை
1 min read
Rs. 25,000 incentive for couples having 2nd and 3rd child in Andhra Pradesh
6.3.2026
ஆந்திரப் பிரதேசத்தில் குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை சரிசெய்ய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு புதிய திட்டங்களை அறிவித்து வருகிறார்.
அந்த வகையில் சட்டப்பேரவையில் ‘புதிய மக்கள் தொகை மேலாண்மைக் கொள்கை’ குறித்த வரைவுத் திட்டத்தை அவர் வெளியிட்டார்.
அதில், இரண்டாவது, மூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிகளுக்கு ரூ.25,000 ஊக்கத்தொகை வழங்கப்படும்.
மூன்றாவது குழந்தைக்கு 5 வயது வரை மாதம் ரூ.1,000 ஊட்டச்சத்து உதவித்தொகையாக வழங்கப்படும். 18 வயது வரை அக்குழந்தைக்கு இலவசக் கல்வி வழங்கப்படும்.
குழந்தையைப் பெற்றெடுக்கும் தாய்க்கு 12 மாதங்கள் விடுமுறையும், தந்தைக்கு 2 மாதங்கள் விடுமுறையும் வழங்ப்படும்.
அரசு மருத்துவமனைகளில் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு PPP முறையில் IVF சிகிச்சை வழங்கப்படும் ஆகிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
ஆந்திராவின் மொத்தக் கருவுறுதல் விகிதம் 1.5 ஆகக் குறைந்துவிட்டது, இது 2.1 ஆக உயர வேண்டும் என்பது அரசின் இலக்கு என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
இந்த வரைவுத் திட்டம் குறித்து ஒரு மாதம் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டும் என்றும் மார்ச் மாத இறுதிக்குள் கொள்கை இறுதி செய்யப்பட்டு, ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.