June 6, 2026

Seithi Saral

Tamil News Channel

பாவூர்சத்திரத்தில் மாவட்ட அளவிலான கராத்தே போட்டி

1 min read

District level karate competition at Pavurchatram

5/4/2026
தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கராத்தே போட்டியினை யூனியன் சேர்மன் காவேரி சீனித்துரை தொடங்கி வைத்தார்.

தென்காசி மாவட்ட ஸ்போர்ட்ஸ் கராத்தே அசோசியேசன் சார்பில் மாவட்ட அளவிலான 5வது கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி பாவூர்சத்திரத்தில் நடைபெற்றது. கீழப்பாவூர் யூனியன் சேர்மன் காவேரி சீனித்துரை தலைமை வகித்து போட்டிகளை தொடங்கி வைத்தார். இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர்.

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் மெடல் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கண் தான விழிப்புணர்வு குழு நிறுவனர் கே.ஆர்.பி. இளங்கோ, மருத்துவர் சரிதா அருண்குமார், பள்ளி தலைமைஆசிரியர் மோகனா தேவி, வழக்கறிஞர் ரேவதி தமிழரசி மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். போட்டிக்கான ஏற்பாடுகளை தென்காசி மாவட்ட ஸ்போர்ட்ஸ் கராத்தே அசோசியேசன் தலைவர் சிவபிரகாஷ், செயலாளர் தங்கமுருகன், பொருளாளர் மாஸ்டர் கணேஷ், சங்கீதா உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *