August 2, 2026

Seithi Saral

Tamil News Channel

விருதுநகர்: காவலாளி வெட்டிக்கொன்ற மகளின் காதலன்

1 min read

The boyfriend of the daughter who was hacked to death by a guard near Virudhunagar

18.4.2026
விருதுநகர் அருகே உள்ள சதானந்தபுரத்தை சேர்ந்தவர் குருசாமி (65 வயது). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பண்ணையில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மகள் பத்மபிரியா (வயது 21). கல்லூரியில் படித்து வந்தார்.

விருதுநகர் குமாரபுரத்தை சேர்ந்தவர் பாண்டீஸ்வரன் (24). ஆட்டோ டிரைவர். பத்மபிரியாவும், பாண்டீஸ்வரனும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கல்லூரி விடுமுறையின்போது பத்மபிரியாவை அழைத்து சென்று பாண்டீஸ்வரன் குடித்தனம் நடத்தி வந்துள்ளார். அப்போது அடிக்கடி இருவருக்கிடையே பிரச்சினை ஏற்பட்டதால் பத்மபிரியா தனது தாய் வீட்டிற்கு வந்து விட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த பாண்டீஸ்வரன், அவரது அண்ணன் ஆகியோர் வாடியூர் கண்மாய் அருகே வந்த குருசாமியை வெட்டிக்கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து குருசாமியின் மனைவி தனலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பாண்டீஸ்வரன், அவரது அண்ணன் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *