June 10, 2026

Seithi Saral

Tamil News Channel

சென்னையில் இருந்து தென்காசி, கன்னியாகுமரிக்கு சிறப்பு ரெயில்

1 min read

Special train from Chennai to Tenkasi and Kanyakumari

29.4.2026
கோடை காலத்தையொட்டி, பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னையில் இருந்து கன்னியாகுமரி, தென்காசிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சென்னை எழும்பூரில் இருந்து நாளை (30-ந் தேதி) இரவு 11.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06045) மறுநாள் மதியம் 1 மணிக்கு கன்னியாகுமரியை சென்றடையும்.

மறுமார்க்கத்தில், கன்னியாகுமரியில் இருந்து மே 3-ந் தேதி இரவு 11.25 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06046) மறுநாள் மதியம் 11.30 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடைகிறது.

இதேபோல், தாம்பரத்தில் இருந்து நாளை (30-ந் தேதி) இரவு 10.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06089) மறுநாள் காலை 10 மணிக்கு தென்காசியை சென்றடையும்.

மறுமார்க்கத்தில், செங்கோட்டையில் இருந்து மே 3-ந் தேதி இரவு 9.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06090) மறுநாள் காலை 10.30 மணிக்கு தாம்பரத்தை சென்றடையும்.

இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு இன்று மாலை 6 மணிக்கு தொடங்கிவிட்டது

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *