’காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’- புத்தகம் விஜய்க்கு உதயநிதி பரிசு
1 min read
‘The Colour of Time is Black and Red’ – Book Vijay receives Udhayanidhi Award
11.5.2026
தமிழ்நாடு முதல் அமைச்சர் விஜய் இன்று முன்னாள் முதல்வர் முக ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மு.க.ஸ்டாலின் வீட்டிற்கே சென்ற விஜய்யை, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வாசலில் வந்து வரவேற்று அழைத்து சென்றார்.
வீட்டிற்குள் சென்ற விஜய்யை கையை பிடித்து அழைத்து சென்ற மு.க.ஸ்டாலின், பிறகு பொன்னாடை போர்த்தி வாழ்த்தினர். இரு தலைவர்களும் சுமார் 10 நிமிடங்கள் சந்தித்து பேசினார். இதையடுத்து, முதல் அமைச்சர் விஜய்க்கு ‘ காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ என்ற புத்தகத்தை உதயநிதி ஸ்டாலின் பரிசாக அளித்தார்.
முதல் அமைச்சர் விஜய்யுடன் அமைச்சர் என்.ஆனந்தும் உடன் சென்றார். விஜய் வருகையின் போது மு.க.ஸ்டாலின் வீட்டில் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, அன்பில் மகேஷ், அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.