புங்கம்பட்டியில் இந்து சமய பண்பாட்டு பயிற்சி முகாம்
1 min read
Hindu Religious and Cultural Training Camp in Pungampatti
13.5.2026
தென்காசி மாவட்டம் கடையம் அருகில் புங்கம்பட்டியில் இந்து சமய பண்பாட்டு பயிற்சி குழுவின் 4ஆம் ஆண்டு கோடைக்கால பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.
15 நாட்கள் நடைபெற்ற இப்பயிற்சி வகுப்பில் 130 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். பயிற்சி வகுப்பில் ஸ்லோகங்கள், திருவிளையாடல் புராணம், விநாயகர் அகவல், கந்த சஷ்டி கவசம், பொது அறிவு போன்றவை பயிற்றுவிக்கப்பட்டு
வினாடிவினா போட்டிகள், ஸ்லோகங்கள் ஒப்புவித்தல், ஓவியம் வரைதல் ஆகிய போட்டிகளும் நடந்தப்பட்டது.
போட்டிகளில் கலந்து கொண்ட மாணவ மாணவியர் அனைவருக்கும் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. சோமு மூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர் பிரேமலதா, ஒன்றியக் குழு உறுப்பினர் ஆவுடையகோமதி, தலைமை ஆசிரியர் தங்கசாமி, இன்ப சேகரன் (ஓய்வு), ஆசிரியர் கஜேந்திரன், வழக்கறிஞர்கள் தினேஷ், ராஜசேகர், ஓம் சக்தி சுகராஜன், தொழிலதிபர் பிரபாகரன், ஆகியோர் சிறப்பு விருந்தினார்களாக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கி சிறப்பித்தனர். பயிற்சி
வகுப்பு நடைபெற்ற நாட்களில் மாணவ மாணவிகளுக்கு மதியம் உணவு மற்றும் குளிர்பானம் வழங்கப்பட்டது.
மேலும், முருகன், முருகையா, ராதாகிருஷ்ணன், கனகராஜ், கனகராஜ், சுசீலா, அருணா, மஹாலக்ஷ்மி, மதன்ராஜா, ரம்யா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பயிற்சி வகுப்பு மற்றும் விழா ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் ராமராஜ் செய்திருந்தார்.