முன்னாள் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்ற புதிய கேரள முதல்வர்
1 min read
New Kerala Chief Minister meets and congratulates former Chief Minister
16.5.2026
கேரள முதலமைச்சராகப் பொறுப்பேற்கவுள்ள வி.டி. சதீசன் மற்றும் பிற அமைச்சர்கள் நாளை மறுநாள் (மே 18-ஆம் தேதி) நடைபெறும் விழாவில் பதவியேற்ககிறார்.
நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எஃப் (UDF) கூட்டணி மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமான இடங்களை கைப்பற்றி வெற்றிப்பெற்றது. இதில் காங்கிரஸ் மட்டும் 63 இடங்களை கைப்பற்றியது. இருப்பினும் முதலமைச்சரை தேர்வு செய்வதில் பெரும் இழுபறி நீடித்துவந்த நிலையில், காங்கிரஸ் தலைமை சுதீஷனை முதலமைச்சராக அறிவித்தது.
இதைதொடர்ந்து, வி.டி.சுதீசன் மறைந்த முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டியின் இல்லத்தை பார்வையிட்டார்.
பின்னர் பேசிய அவர்,”பதவியேற்பு விழாவிற்கு மற்ற மாநில தலைவர்களையும் தேசிய தலைமை அழைக்கும்” என கூறினார்.
இந்நிலையில், தமிழக முதலமைச்சர் விஜய் பாணியில், கேரள முன்னாள் அமைச்சர் பினராயி விஜயனை புதிய முதலமைச்சர் வி.டி.சதீஷன் சந்தித்துள்ளார்.
கடந்த 5 ஆண்டுகளாக இரு கட்சியினரும் கடுமையாக விமர்சித்து வந்த நிலையில் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
இதற்கிடையே, இந்த பதவியேற்பு விழாவில் மற்ற மாநில காங்கிரஸ் முதலமைச்சர் உடன் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யும் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.