June 18, 2026

Seithi Saral

Tamil News Channel

ஈரான் அமைதி ஒப்பந்தத்தை ஏற்க டிரம்ப் பாகிஸ்தானுக்கு நிபந்தனை

1 min read

Trump sets condition for Pakistan to accept Iran peace deal

26.5.2026
கொக்கி போட்ட டிரம்ப்.. சிக்க மறுத்த பாகிஸ்தான் – இஸ்ரேல் அப்செட் – அது என்ன ஆபிரஹாம் உடன்படிக்கை?
ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக அமெரிக்க அதிபர் டிரம்ப் புதியதொரு நிபந்தனையை முன்வைத்துள்ளார்.

அதாவது பாகிஸ்தான் மற்றும் சவூதி அரேபியா ஆபிரஹாம் உடன்படிக்கையை கட்டாயம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். ஈரானுடன் அமைதி ஒப்பந்தம் எட்ட டிரம்ப் இதை ஒரு நிபந்தனையாக வைத்துள்ளது குறிப்பாக பாகிஸ்தானை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

ஆபிரஹாம் உடன்படிக்கை என்றால் என்ன?

1948 இல் பாலஸ்தீன நிலத்தை கைப்பற்றி இஸ்ரேல் உருவாக்கப்பட்டது. சக இஸ்லாமிய நாடான பாலஸ்தீனம் துண்டாடப்பட்டு உருவாக்கப்பட்ட இஸ்ரேலை அரபு நாடுகள் ஒரு நாடகாவே ஏற்றுக்கொள்ளவில்லை.

இதனால் இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகள் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இந்த மோதலை தனிக்கும் விதமாக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன் பயனாக 1979 ஆம் ஆண்டு எகிப்தும், 1994 ஆம் ஆண்டு ஜோர்டானும் இஸ்ரேலுடம் அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டன. மேலும், இஸ்ரேலை தனிநாடாக அங்கீகரித்தன.

ஆனால், பிற அரபு வளைகுடா நாடுகள் இஸ்ரேலுடன் மோதல் போக்கை கடைபிடித்து வந்தன. மேலும், இஸ்ரேலை ஒரு தனிநாடாக ஏற்றுக்கொள்ளாமலும், அந்நாட்டுடன் பொருளாதாரம், ராஜாங்கம், தூதரகம் உள்பட எந்த வித உறவுகளையும் ஏற்படுத்தாமல் இருந்தன.

2020இல் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் முயற்சியால் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பக்ரைன் நாடுகள் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தத்தை கையெழுத்திட்டன.

ஆனால் பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா இஸ்ரேலை ஒரு நாடாக இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. பாகிஸ்தான் தனது 78 ஆண்டு கால வரலாற்றில் இஸ்ரேலை ஒருபோதும் அங்கீகரித்ததில்லை.

இந்த நிலையில் ஆபிரஹாம் உடன்படிக்கையில் இணைய வேண்டும் என்ற டிரம்ப்பின் அழுத்தத்திற்கு அந்நாடு உடன்பட மறுத்துள்ளது.

இதுகுறித்து பேட்டியில் பேசிய பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப், “நமது அடிப்படை சித்தாந்தத்துடன் அந்த உடன்படிக்கை உடன்படவில்லை. எனவே அதை ஏற்பது நமது அடிப்படை சித்தாந்தத்தை மீறுவதாகும்.

ஒரு நாளும் நம்ப முடியாதவர்களுடன் (இஸ்ரேலுடன்) எப்படி நீங்கள் ஒன்றாக அமர முடியும். இஸ்ரேலை ஒரு நாடாக பாஸ்போர்ட்டில் கூட குறிப்பிடாத ஒரே நாடு நாம் (பாகிஸ்தான்) மட்டும் தான். இந்த உடன்படிக்கையை ஏற்க முடியாது என்பதில் நாம் மிகவும் தெளிவான நிலைப்பாடு கொண்டுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *