August 2, 2026

Seithi Saral

Tamil News Channel

கோவில், பள்ளி அருகே 129 டாஸ்மாக் கடைகள்; அண்ணாமலை கள ஆய்வு

1 min read


Annamalai urges closure of 129 TASMAC shops; conducts field inspection

1.8.2026
‘கள ஆய்வில் 129 டாஸ்மாக் மதுபான கடைகள், கோவில்கள், கல்வி நிலையங்கள் மற்றும் பஸ் நிலையங்கள் அருகில் உள்ளது. இதனை தவெக அரசு உடனடியாக மூட வேண்டும்” என வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
தமிழக பா.ஜ.க, முன்னாள் தலைவர் அண்ணாமலை, அக்கட்சியில் இருந்து விலகி, ‘வீ தி லீடர்ஸ்’ என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இதன் சார்பில், ஜூலை முழுவதும், போதைக்கு எதிராக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. ஜூலை மாதத்தில், அண்ணாமலை அறிவுறுத்தலின் பேரில் அமைப்பினர் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

போதைப்பொருளுக்கு எதிராக, அண்ணாமலை ஜூலை 12ம் தேதி பொள்ளாச்சியில் தனது முதல் மாநாட்டை நடத்தினார். தற்போது தனது அமைப்பின் சார்பாக தமிழகம் முழுவதும் கள ஆய்வு நடத்தி 129 டாஸ்மாக் கடைகளின் பட்டியலை வெளியிட்டு, அதை உடனடியாக மூட அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
அவர் தமிழக முதல்வர் விஜய்க்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
தமிழக முதல்வர் விஜயின் கவனத்திற்கு, ‘வி தி லீடர்ஸ் பவுண்டேஷன்’ நடத்திய கள ஆய்வை கொண்டு சென்றோம்.
தமிழகம் முழுவதும் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பஸ் நிலையங்களிலிருந்து 500 மீட்டர் சுற்றளவிற்குள் 129 டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகள் தொடர்ந்து இயங்கி வருவதை நாங்கள் கவனித்துள்ளோம்.
இந்தக் கடைகளை உடனடியாக மூடுமாறும், நமது குழந்தைகள் கற்கும், பிரார்த்தனை செய்யும் மற்றும் பயணம் செய்யும் இடங்களைப் பாதுகாக்குமாறும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *