August 1, 2026

Seithi Saral

Tamil News Channel

“மக்களின் குறைகள் ஒவ்வொன்றாக தீர்க்கப்படும்.”-தென்காசியில் அமைச்சர் வி.கே.ராஜீவ் பேச்சு

1 min read

“People’s grievances will be resolved one by one.” – Minister V.K. Rajeev speaks in Tenkasi.

1/8/2026
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (1.8.2026) தமிவக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மற்றும் தென்காசி மாவட்ட பொறுப்பு அமைச்சர் டாக்டர் வி.கே.ராஜீவ் 241 பயனாளிகளுக்கு ரூ.237.69 இலட்சம் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்டங்களை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மற்றும் தென்காசி மாவட்ட பொறுப்பு அமைச்சர் மரு.வி.கே.ராஜீவ் பேசியதாவது:-

தமிழ்நாடு முதலமைச்சர் மக்களுக்காக மக்கள் நலனுக்கான ஆட்சி அமைத்து இருக்கிறார்கள். தென்காசி மாவட்ட மக்களுக்கு பணியாற்றுவதற்கு என்னை பொறுப்பு அமைச்சராக நியமித்து இருக்கிறார்கள். முதற்கட்டமாக அரசு சார்பில் அனைத்து துறைகளின் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. தென்காசி மாவட்டத்தில் கல்வி, மருத்துவம் ஆகிய கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு தனி முகாம் நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். அதன் மூலம் அவர்களுக்கு அனைத்து உதவிகளும் கிடைக்கும். மக்களாகிய நீங்கள் எதற்கும் கவலைப்படாதீர்கள். உங்கள் குறைகள் ஒவ்வொன்றாக தீர்க்கப்படும். பொது மக்களுக்கு பேருந்து வசதி மற்றும் பள்ளிக்குழந்தை களுக்கு பேருந்து வசதி உடனடியாக சரி செய்து தரப்படும். சாலை வசதி ஏற்படுத்துவதற்கு சிறிது காலம் அவகாசம் கொடுங்கள். அரசு சார்பில் எல்லா உதவியும் மக்களுக்கு செய்து தரப்படும்.

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அலுவலர்களிடம் வழங்கப்படும் உங்கள் கோரிக்கை மனுக்களுக்கு உடனடி தீர்வு கிடைக்க வழி வகை செய்து தரப்படும். தென்காசி மாவட்டம் சுற்றுலா தலமாக அமைந்துள்ளது. உங்களுடைய வாழ்வாதாரத்திற்கு அரசு சார்பில் அனைத்து உதவிகளும் செய்து தரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதனைத் தொடர்ந்து, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலம் 2 பயனாளிகளுக்கு வீல்சேர் மற்றும் 07 பயனாளிகளுக்கு ஸ்மார்ட் போன் என மொத்தம் 10 பயனாளிகளுக்கு ரூ.326 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் மகளிர் திட்டம் மூலம் 2 பயனாளிகளுக்கு ரூ.143.50 இலட்சம் மதிப்பிலான வங்கிக்கடன் இணைப்பிற்கான நலத்திட்ட உதவிகளையும், வருவாய்த்துறையின் மூலம் 06 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும், மாவட்ட வழங்கல் அலுவலகம் மூலம் 110 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளையும், கூட்டுறவுத்துறையின் மூலம் 08 பயனாளிகளுக்கு 3943 இலட்சம் மதிப்பிலான கடன் உதவிகளுக்கான ஆணைகளையும், மாவட்ட சமூகநலத்துறையின் மூலம் 103 பயனாளிகளுக்கு ரூ.5150 இலட்சம் மதிப்பீட்டில் முதலமைச்சரின் பெண்குழந்தை பாதுகாப்புத்திட்டத்திற்கான உதவித்தொகைக்கான காசோலைகளையும், வேளாண்மைத்துறையின் மூலம் 02 பயனாளிகளுக்கு குறுவை சிறப்புத் தொகுப்புசாகுபடி திட்டத்தின் கீழ் நுண்ணூட்ட உரக்கலவை என மொத்தம் 241 பயனாளிகளுக்கு ரூ.237.69 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மற்றும் தென்காசி மாவட்ட பொறுப்பு அமைச்சர் டாக்டர் வி.கே.ராஜீவ் வழங்கினார்.

இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங், மாவட்ட வருவாய் அலுவலர் மா.வீராசாமி, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) டாக்டர் இரா.தண்டபாணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) காளிமுத்து, மாவட்ட வழங்கல் அலுவலர் பால்துரை மற்றும் அரசு உயர் அலுவலர்கள், பயனாளிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *