August 6, 2026

Seithi Saral

Tamil News Channel

முதல்வர் பற்றி அவதூறு பேச்சு- உதயநிதி கைது

1 min read

Udhayanidhi arrested for making defamatory remarks about the Chief Minister.

4/8/2026

பெண்கள் தொடர்பாக இரட்டை அர்த்தத்தில் அவதுாறாக பேசியதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியை போலீசார் கைது செய்தனர். அவர் மீது 9 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவரது முன் ஜாமின் மனுவை விசாரித்த ஐகோர்ட் நீதிபதி, ”உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்” என உத்தரவிட்டார்.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசை தடுக்கத் தவறிய தமிழக வெற்றிக் கழக அரசை கண்டித்து, தி.மு.க., சார்பில் தஞ்சாவூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. காவிரி நீருக்காக நடந்த போராட்டத்தில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, எந்தவித கவலையும் இன்றி, கேட்கவே கூசும் அளவிற்கு கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்தியதாக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ், ராஜ்மோகன், கீர்த்தனா, ரமேஷ் உள்ளிட்ட பலரும் உதயநிதி பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

பெண்கள் தொடர்பாக இரட்டை அர்த்தத்தில் அவதுாறாக பேசியதாக எதிர்கட்சி தலைவர் உதயநிதியை போலீசார் கைது செய்தனர். உதயநிதியின் நீலாங்கரை வீட்டிற்கு வந்த போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தலைமையிலான போலீசார், அவரை கைது செய்தனர். உதயநிதி வீட்டிற்கு முன்பு முன்னாள் அமைச்சர்கள் உட்பட திமுகவினர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *