கருணாநிதிக்கு மா.சுப்பிரமணியன் மாரத்தான் ஓடி அஞ்சலி
1 min read
Ma. Subramanian pays tribute to Karunanidhi by running a marathon.
7.8.2026
கருணாநிதியின் நினைவு நாளை முன்னிட்டு மா.சுப்பிரமணியன் அவருக்கு முற்றிலும் வித்தியாசமான முறையில் மாரத்தான் ஓடி அஞ்சலி செலுத்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
தி.மு.க. முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏ.வுமான மா.சுப்பிரமணியன், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி மீது மிகுந்த பற்று கொண்டவர். கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்த போதே, பல்வேறு மாரத்தான் ஓட்டப் போட்டிகளில் கலந்து கொண்டு அவரிடம் நேரடியாக பாராட்டு பெற்றவர் என்ற பெருமை இவருக்கு உண்டு.
இந்த நிலையில், கருணாநிதியின் நினைவு நாளை முன்னிட்டு மா.சுப்பிரமணியன் அவருக்கு முற்றிலும் வித்தியாசமான முறையில் அஞ்சலி செலுத்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
கடந்த கொரோனா பொதுமுடக்க காலத்தின் போது, மா.சுப்பிரமணியன் தனது வீட்டு மாடியில் ‘8’ வடிவம் அமைத்து, அதில் தொடர்ந்து 4 மணி நேரம் 8 நிமிடங்கள் 18 விநாடிகள் நிற்காமல் ஓடி ஆசியா புத்தகத்தில் இடம் பிடித்திருந்தார்.
கருணாநிதியின் நினைவு நாளான இன்று, அதே பாணியில் ஒரு புதிய முயற்சியை கையில் எடுத்தார். இதற்காக இன்று அதிகாலை 4.30 மணிக்கே அவர் ஓடத் தொடங்கினார். காதொலி கருவி மூலம் கருணாநிதியின் காந்தக் குரல் மேடைப் பேச்சு தொகுப்புகளை கேட்டபடியே, தனது வீட்டு மாடியில் உள்ள 8 வடிவப் பாதையில் விறுவிறுப்பாக ஓடினார்.12 கிலோ மீட்டர் தூரம்கலைஞரின் பேச்சை கேட்டபடி, சற்றும் சோர்வடையாமல் தொடர்ந்து 12 கிலோ மீட்டர் தூரம் ஓடி முடித்தார்.
நினைவு நாளில் தனது ஆசானுக்கு இந்த வினோத மாரத்தான் ஓட்டத்தின் மூலம் மா.சுப்பிரமணியன் செலுத்திய அஞ்சலி, தி.மு.க தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே நெகிழ்ச்சியையும், பாராட்டுகளையும் பெற்று வருகிறது.