August 21, 2026

Seithi Saral

Tamil News Channel

எழும்பூர் வழியாக தூத்துக்குடி – நரசப்பூர் இடையே சிறப்பு ரெயில்

1 min read

Special train between Tuticorin and Narsapur via Egmore

21.8.2026
பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு தூத்துக்குடி – ஆந்திர மாநிலம் நரசப்பூர் இடையே சிறப்பு ரெயில் சென்னை எழும்பூர் வழியாக இயக்கப்படுகிறது. இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

“தூத்துக்குடியில் இருந்து செப்டம்பர் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் (திங்கட்கிழமை) இரவு 11.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06019) 3-வது நாள் இரவு 12.20 மணிக்கு நரசப்பூரை சென்றடையும்.

மறுமார்க்கத்தில், நரசப்பூரில் இருந்து செப்டம்பர் 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் (புதன்கிழமை) காலை 4 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06020) மறுநாள் காலை 4.30 மணிக்கு தூத்துக்குடியை வந்தடையும்.

18 பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரெயில், தமிழகத்தில் மேலூர், கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்), விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நாளை (ஆகஸ்டு 22-ந் தேதி) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *