September 5, 2026

Seithi Saral

Tamil News Channel

நெல்லை: பல லட்சம் ரூபாய் மதிப்பிலான குழாய்கள் எரிந்து நாசம்

1 min read

Nellai: Pipes worth several lakh rupees destroyed by fire

5.9.2026
நெல்லை மாவட்டம் பொதிகை நகர் அருகே மாநகராட்சி கூட்டு குடிநீர் திட்டப் பணிகளுக்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான ஹெச்.டி.பி. குழாய்கள் இன்று திடீரென தீப்பிடித்து எரிந்தன. அதில் இருந்து வெளியேறிய கரும்புகை சுமார் 4 கி.மீ. தொலைவுக்கு பரவியதால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டம் ஏற்பட்டது.

இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு சுவாசக்கோளாறு ஏற்பட்டு பெரும் அவதிக்குள்ளாகினர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பாளையங்கோட்டை தீயணைப்புத்துறையினர், நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *