September 18, 2026

Seithi Saral

Tamil News Channel

குறைந்து வரும் ஏ.டி.எம். பணப்பரிவர்த்தனை

1 min read

Declining ATM cash transactions

18/9/2026
சில்லறை வர்த்தகம் முதல் பெரு வணிகங்கள் வரை அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட்ட தற்போதைய காலத்தில், ஏ.டி.எம்.களுக்கு சென்று வரிசையில் நின்று பணம் எடுக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

ரிசர்வ் வங்கியின் சமீபத்திய தரவுகளின்படி, கடந்த 2022-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2026-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஏ.டி.எம். மூலமாக பணப்பரிவர்த்தனை சுமார் 19 சதவீதம் வரை சரிந்துள்ளது. அதன்படி, கடந்த 2022-ம் ஆண்டு முதல் 2026-ம் ஆண்டு வரையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாத பணப்பரிவர்த்தனை புள்ளிவிவரங்களை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

அதில் 2022-ம் ஆண்டில் ஏ.டி.எம். மூலம் ரூ.2 லட்சத்து 72 ஆயிரத்து 103 கோடியாக பணப்பரிவர்த்தனை இருந்துள்ளது. அதற்கடுத்த ஆண்டுகளில் கணிசமாக குறைந்து வந்திருக்கிறது. அந்த வகையில் 2023-ல் ஏ.டி.எம். மூலமான பணப்பரிவர்த்தனை ரூ.2 லட்சத்து 69 ஆயிரத்து 298 கோடியாகவும், 2024-ல் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்து 318 கோடியாகவும், 2025-ல் ரூ.2 லட்சத்து 32 ஆயிரத்து 955 கோடியாகவும்,

2026-ல் கடந்த ஜூலை மாதத்தில் ரூ.2 லட்சத்து 20 ஆயிரத்து 592 கோடியாகவும் ஏ.டி.எம். வாயிலான பணப்பரிவர்த்தனை குறைந்துள்ளது. 2022-ம் ஆண்டுடன், நடப்பாண்டு ஜூலை மாத பரிவர்த்தனையை ஒப்பிடுகையில், ரூ.51 ஆயிரத்து 511 கோடி குறைந்திருக்கிறது. அதாவது 18.9 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது குறிப் பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *