கடையம் திருவள்ளுவர் கழக ஆண்டுவிழாவில் பட்டிமன்றம்
1 min read
Debate at the Kadayam Thiruvalluvar Kazhagam Annual Celebration
2.10.2026
அம்பாசமுத்திரம், அக். 1: கடையம் திருவள்ளுவர் கழக 32ஆம் ஆண்டு விழா ஞாயிற்றுக்கிழமை (அக். 4) மாலை 6 மணிக்கு கடையம் நடராஜ் மகாலில் நடைபெறுகிறது.
தலைவர் ஆ. சேதுராமலிங்கம் தலைமை வகிக்கிறார். தென்காசி திருவள்ளுவர் கழகத் தலைவர் ந. கனகசபாபதி, கடையம் வியாபாரிகள் சங்கப் பொருளாளர் க. பிரம்மநாயகம் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். திருவள்ளுவர் கழக மதிப்புறு ஆலோசகர் க. சங்கரநாராயணன் ஒரு குறள் சிந்தனையும், ஆழ்வார்குறிச்சி திருவள்ளுவர் கழக துணைத் தலைவர் ச. மாடசாமி, அம்பாசமுத்திரம் திருக்குறள் அறக்கட்டளைப் பொருளாளர் புன்னைவன நாறும்பூநாதன் ஆகியோர் வாழ்த்துமையும் வழங்குகின்றனர்.
தொடர்ந்து, கடையம் வட்டாரப் பள்ளிகளில் 10, 12ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வுகளில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களும், ‘இயன்றதைச் செய்வோம் இயலாதவர்க்கே’ குழுவினரும் கெளரவிக்கப்படவுள்ளனர்.
அதையடுத்து, வ. பாமணி தலைமையில் ‘வள்ளுவர் காட்டும் இல்லற நெறிகளைப் பெரிதும் போற்றுவோர் ஆண்களே, பெண்களே’ என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெறுகிறது. ஆண்களே என்ற தலைப்பில் ஆ. பாலன், த. அந்தோணிராஜ், மு. வேலு ஆகியோரும், பெண்களே என்ற தலைப்பில் கி. ராமலட்சுமி, ரா. சங்கரகோமதி என்ற ப்ரியா, கோ. அனிதா ஷிபா லில்லி ஆகியோரும் பேசுகின்றனர்.
கழகச் செயலர் க.சோ. கல்யாணி சிவகாமிநாதன் வரவேற்கிறார். இணைச் செயலர் செ. சோமசுந்தரம் நன்றி கூறுகிறார். ஏற்பாடுகளை துணைத் தலைவர், பொருளாளர், இணைச் செயலர்கள், செயற்குழு உறுப்பினர்கள், மதிப்புறு ஆலோசகர்கள் செய்து வருகின்றனர்.