October 13, 2026

Seithi Saral

Tamil News Channel

கடையநல்லூர்: கல்குவாரி அமைக்க எதிர்ப்பு-கலெக்டரிடம் கிராம மக்கள் மனு

1 min read

Kadayanallur: Villagers submit petition to Collector opposing the establishment of a stone quarry.

13/10/2026
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா ஈச்சம் பொட்டல்புதூர் கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் 30-க்கும் மேற்பட்டோர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் மனு வழங்க வருகை தந்தனர்.

இது குறித்து ஈச்சம்பொட்டல் புதூர் பொதுமக்கள் கூறியதாவது, எங்கள் கிராமம் விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்ட கிராமமாகும். மேலும் பலர் சுமார் 2000-க்கும் மேற்பட்ட ஆடுகள் வளர்த்து வரும் சூழலில் அப்பகுதியில் உள்ள மேச்சல் நிலத்தைபயன்படுத்தி வந்த நிலையில் கடந்த திமுக ஆட்சியில் எங்கள் ஊரில் கல்குவாரி அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் துறை சார்பில் போர்டு வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தென்காசி மாவட்ட நிர்வாகத்திற்கு பல்வேறுமுறை மனு வழங்கியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கல்குவாரி அமைந்தால் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதோடு ஆடு மாடுகள் மேய்ச்சல் நிலமும் பாதிக்கப்படும்.இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

மேலும் இந்த கல்குவாரியானது கடந்த திமுக ஆட்சி காலத்தில் அப்போதைய தென்காசி மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் மூலமாக அனுமதி வழங்கி உள்ளதாக குற்றம் சாட்டினார். அதிகாரிகளும் குவாரி அமைப்பவருக்கு ஆதரவாக செயல்படும் சூழலில் நாங்கள் அளிக்கும் மனுவை கல்குவாரி உரிமையாளருக்கு அனுப்பி வைத்து அதன் மூலம் எங்களை தொடர்ந்து கல்குவாரி அமைக்க இருப்பவர்கள் மிரட்டி வருகிறார்கள் எனவே கல்குவாரி அமைவதை அரசு ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *