எல்.கே.அத்வானி மருத்துவமனையில் அனுமதி
1 min read
L. K. Advani admitted to hospital
17.10.2026
பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானி. 98 வயதான இவர், வயது மூப்பின் காரணமாக அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சளி பிரச்சினை காரணமாக டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று இரவு 7:30 மணியளவில் அத்வானி அனுமதிக்கப்பட்டார். நுரையீரல் தொற்று பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அத்வானியின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.
அடல் பிஹாரி வாஜ்பாய் அரசின் காலகட்டத்தில், மத்திய உள்துறை மந்திரியாக அத்வானி பணியாற்றினார். 2002 முதல் 2004 வரையிலான காலத்தில் துணை பிரதமராக பணியாற்றினார். இந்தியாவின் உயரிய குடிமை விருதான பாரத ரத்னா, 2024 மார்ச் மாதம் அத்வானிக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.