November 2, 2026

Seithi Saral

Tamil News Channel

காஷ்மீர் வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீ

1 min read

Wildfires burning in Kashmir forest

2.11.2026
காஷ்மீர் வனப்பகுதியில் கடந்த 2 நாட்களாக காட்டுத்தீ கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது. இதில் நூற்றுக்கணக்கான ஏக்கர் காடுகள் நாசமடைந்தன.

ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மற்றும் தோடா மாவட்ட எல்லைப் பகுதிகளில் வரலாறு காணாத வகையில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக கொழுந்துவிட்டு எரிந்து வரும் இந்த தீயினால், டிராப்ஷல்லா, லித்தர் மற்றும் டிரால் வனப்பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் காடுகள் தீயில் கருகி நாசமாகின.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் நிலவி வரும் கடுமையான வறண்ட வானிலை மற்றும் நீண்ட நாட்களாக மழை இல்லாததே இந்த காட்டுத்தீக்கு முக்கியக் காரணமாக கூறப்படுகிறது. காற்றில் ஈரப்பதம் குறைந்ததால், தீ மளமளவென அடுத்தடுத்த மலைக் கிராமங்களை நோக்கிப் பரவி வருகிறது. தூரத்திலிருந்தே வானை முட்டும் அளவுக்கு கரும்புகையும் நெருப்புப் பிழம்புகளும் எழுவது அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர், தீயணைப்பு படையினர் மற்றும் உள்ளூர் மீட்புக்குழுவினர் தீயை அணைக்கும் பணிகளில் போர்க்கால அடிப்படையில் ஈடுபட்டுள்ளனர். எனினும், செங்குத்தான மலைப்பகுதி மற்றும் கடுமையான காற்று வீசுவதால் தீயைக் கட்டுப்படுத்துவதில் கடும் சவால்கள் நீடித்து வருகின்றன. வனவிலங்குகள் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படும் நிலையில், பொதுமக்கள் யாரும் வனப்பகுதிக்குள் செல்ல வேண்டாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *