திருக்குறளை ஒப்புவித்த சிறுவன்-உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தான்
1 min read
A boy who recited the Thirukkural has earned a place in a world record book.
8.11.2026
வேலூர் கொசப்பேட்டையை சேர்ந்தவர் சரவணகுமார். இவர் சென்னையில் உள்ள ஐ.டி.நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மேனகாதேவி. இவர்களுக்கு கனிஷ்கர் (6 வயது), லிதேஷ் (3 வயது) என்ற 2 மகன்கள் உள்ளனர்.
கனிஷ்கர் சென்னையில் டி.ஏ.வி. பப்ளிக் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறான். சிறுவனுக்கு திருக்குறள் மீது ஆர்வம் ஏற்பட்டதால் அதை மனப்பாடம் செய்யத் தொடங்கினான். தொடர்ந்து சிறுவன் 60 வினாடிகளில் 30 திருக்குறளை மிக துல்லியமாகவும், சரளமாகவும் ஒப்புவித்தான்.
இந்த சாதனை நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் என்ற உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. இதற்காக சிறுவனுக்கு பதக்கம், சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. மேலும் சிறுவன் திருக்குறள் மீது கொண்டுள்ள ஆர்வத்துக்கு உலக சாதனை அமைப்பு நிறுவனம் பாராட்டு தெரிவித்துள்ளது.