November 9, 2026

Seithi Saral

Tamil News Channel

தீபாவளி: விருதுநகர் மாவட்டத்தில் ரூ. 7000 கோடிக்கு பட்டாசு வர்த்தகம்

1 min read

Diwali: Firecracker trade worth Rs 7,000 crore in Virudhunagar district

8.11.2026
விருதுநகர் மாவட்டத்தில் ரூ. 7000 கோடிக்கு பட்டாசு வர்த்தகம் நடந்துள்ளதால் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இம்மாவட்டத்தில் விருதுநகர், சிவகாசி, சாத்துார், வெம்பக்கோட்டை சுற்றுப்பகுதியில் நாக்பூர், சென்னை, டி.ஆர்.ஓ., உரிமம் பெற்ற 1100 பட்டாசு ஆலைகள் உள்ளன. 4000 க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் உள்ளன.
அவ்வப்போது பெய்த மழை, அதிகாரிகள் ஆய்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த தீபாவளிக்கு கடந்த ஆண்டை விட 30 சதவீதம் பட்டாசு உற்பத்தி குறைந்தது. அதே நேரத்தில் மூலப்பொருட்கள் விலை உயர்வால் 20 முதல் 30 சதவீதம் விலை உயர்ந்தது. பல்வேறு சிரமங்களுக்கு இடையிலும் மக்கள் விரும்பும் வகையில் புது ரக பட்டாசுகளும் அறிமுகப்படுத்தப்பட்டது.
அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு உற்பத்தி சதவீதம் குறைந்தாலும் விலை உயர்வால் கடந்த ஆண்டைப் போலவே ரூ.7000 கோடிக்கு வர்த்தகம் நடந்தது. இதனால் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பட்டாசு உற்பத்தியாளர்கள் கூறியதாவது: உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி இப்பகுதியில் பட்டாசு தயாரிக்கப்படுகிறது. அதே நேரத்தில் மக்கள் விரும்புகிற வெரைட்டி பட்டாசுகளை உற்பத்தி செய்ய முடியவில்லை. இதனால் கடந்த ஆண்டை விட உற்பத்தி சதவீதம் குறைந்தாலும் மூலப்பொருட்கள் விலை உயர்வால் ரூ. 7000 கோடி வரை நடந்துள்ளது, என்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *