November 9, 2026

Seithi Saral

Tamil News Channel

திருநெல்வேலி: உடல் உறுப்புகளை தானம் செய்த 23 வயது இளைஞர்- அரசு மரியாதை

1 min read

Tirunelveli: 23-year-old man who donated his organs receives state honors

9.11.2026
சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த கடையநல்லூரைச் சேர்ந்த 23 வயது இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரது உடலுக்கு தமிழக அரசு சார்பில் முழு அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஹரன் (வயது 23). இவர் கடந்த 5-ம் தேதி நிகழ்ந்த சாலை விபத்து ஒன்றில் சிக்கித் தலையில் பலத்த காயமடைந்தார். இதையடுத்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் திருநெல்வேலியில் உள்ள ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்த போதிலும், சிகிச்சை பலனின்றி ஹரிஹரன் மூளைச்சாவு அடைந்தார். மகனை இழந்த கடும் துயரத்திலும், மற்றவர்களின் உயிரைக் காப்பாற்றும் நோக்கில் ஹரிஹரனின் குடும்பத்தினர் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர்.

குடும்பத்தினரின் முழு ஒப்புதலுடன் ஹரிஹரனின் உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டன. தானமாகப் பெறப்பட்ட உறுப்புகள், அவசரத் தேவையில் இருந்த பல நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டு அவர்களுக்கு மறுவாழ்வு அளித்துள்ளன.

உடல் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச்சடங்குகள் அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பிற்கிணங்க, மறைவிலும் பிறருக்கு வாழ்வு அளித்த இளைஞர் ஹரிஹரனின் உடலுக்கு அரசு அதிகாரிகள் நேரில் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *