November 13, 2026

Seithi Saral

Tamil News Channel

புற்றுநோய், இதயநோய்களுக்கு 10 ஆண்டுகளில் தீர்வு-பிரபல ஏஐ நிறுவன சிஇஓ நம்பிக்கை

1 min read

A solution for cancer and heart diseases within 10 years

12.11.2026
ஏ.ஐ. தொழில்நுட்பத்தை சரியான முறையில் பயன்படுத்தினால், பல நூற்றாண்டுகளாக மனிதர்களால் தீர்க்க முடியாத பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும் என டாரியோ அமோடெய் தெரிவித்துள்ளார்.

புற்றுநோய், அல்சைமர், இதய நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு இன்னும் 10 ஆண்டுகளுக்குள் தீர்வு கிடைக்க வாய்ப்புள்ளதாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிறுவனமான ஆந்த்ரோபிக்கின் தலைமை செயல் அதிகாரி டாரியோ அமோடெய் தெரிவித்துள்ளார்.

‘கிளாட்’ என்ற ஏ.ஐ. செயலியை உருவாக்கிய ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருப்பவர் டாரியோ அமோடெய். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மருத்துவத் துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், “புற்றுநோய், அல்சைமர், இதய நோய் மற்றும் மனநல பாதிப்புகள் உள்ளிட்ட நோய்கள் இன்னும் 10 ஆண்டுகளுக்குள் கடந்த காலத்தின் ஒரு பகுதியாக மாறிவிடும் என்று நம்புகிறேன். ஏ.ஐ. தொழில்நுட்பத்தை சரியான முறையில் பயன்படுத்தினால், பல நூற்றாண்டுகளாக மனிதர்களால் தீர்க்க முடியாத பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும்” என்றார்.மேலும், உயிரியல் ஆராய்ச்சி, புதிய மருந்துகள் கண்டுபிடிப்பு மற்றும் மருத்துவ சிகிச்சைகளில் ஏ.ஐ. தொழில்நுட்பம் மிகப்பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஆனால், ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் இந்த கணிப்பை மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் நிர்வாகிகள் முழுமையாக ஏற்கவில்லை. வெர்டெக்ஸ் பார்மாசூட்டிக்கல்ஸ் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் ஜெப் லெய்டன், இதுபோன்ற கணிப்புகள் நடைமுறைக்கு வருவது கடினம் என்று தெரிவித்துள்ளார்.ஏ.ஐ. மூலம் புதிய மருந்துகளுக்கான மூலக்கூறுகளை கண்டறிவது வேகமடையலாம். ஆனால், அவற்றை ஆய்வகங்களில் சோதிப்பது, விலங்குகள் மற்றும் மனிதர்களிடம் மருத்துவ பரிசோதனைகள் நடத்துவது, பாதுகாப்பை உறுதி செய்வது போன்ற நடைமுறைகளை தவிர்க்க முடியாது என்றும் மருந்து நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. ஒரு புதிய மருந்தை உருவாக்குவதற்கு பொதுவாக 10 முதல் 12 ஆண்டுகள் வரை ஆகும் நிலையில், ஏ.ஐ. தொழில்நுட்பம் இந்த நடைமுறைகளை எந்த அளவுக்கு விரைவுபடுத்தும் என்பது இன்னும் உறுதியாகவில்லை.

எனவே, அடுத்த 10 ஆண்டுகளில் புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை ஒருபுறம் இருந்தாலும், அது எப்போது சாத்தியமாகும் என்பதை அறிவியல் ஆய்வுகளும் மருத்துவ பரிசோதனைகளுமே உறுதி செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *